தளபதி விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ள 'மாஸ்டர்' திரைப்படம் அடுத்த மாதம் 9 ஆம் தேதி, வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று 6 : 30 மணிக்கு நடைபெற உள்ளது.

பிரபல நட்சத்திர ஹோட்டலில் நடைபெற உள்ள இந்த விழாவை, சன் டிவி தொலைக்காட்சி நேரடியாக ஒளிபரப்ப உள்ளது. இதனால் விஜய்யின் ரசிகர்கள் செம்ம குஷியில் உள்ளனர்.

அதே நேரத்தில், சர்க்கார், மெர்சல், போன்ற படங்களின் இசை வெளியீட்டு விழாவில்... சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாமல் பேசிய விஜய், என்ன இந்த முறை என்ன பேசுவார் என்பதும் பலரது எதிர்பார்ப்பு.

மேலும் செய்திகள்: விருது விழா மேடையில் சுழன்று சுழன்று சிலம்பம் சுத்திய ஜோதிகா! வைரலாகும் வீடியோ!
 

இது ஒரு புறம் இருக்க, 'வாத்தி ஸ்டெப்' சேலஞ்சு இணையத்தில், ரசிகர்கள் மத்தியிலும், இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது.  அதன்படி தற்போது, 'மாஸ்டர்' படத்தின் இசை அமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் ஒரு புதிய வீடியோவைப் பகிர்ந்துள்ளார். 

அதில் நூற்றுக்கணக்கான அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் 'வாதி ஸ்டெப்' சவாலுக்கு ஒன்று சேர்ந்து நடனமாடியுள்ளனர்.  இந்த வீடியோவை வெளியிட்டு வாத்தி ஸ்டெப் தெறிக்குதப்பா" என்று பதிவிட்டுள்ளார் அனிரூத்.  

மேலும் செய்திகள் :மஞ்சள் காட்டு மைனாவாக மாறிய பாவனா..! குண்டா இருந்தாலும் கும்முனு ஆகி சுண்டி இழுக்கும் போட்டோஸ்!
 

பிரமாண்டமாக உருவாகியுள்ள 'மாஸ்டர்' படத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் முதல் முறையே ஒன்று சேர்ந்து நடித்துள்ளனர். விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்துள்ளார். மேலும்  ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், சாந்தனு பாக்யராஜ் உட்பட பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.