Asianet News TamilAsianet News Tamil

வாரிசு, துணிவு படங்களை வலைதளங்களில் பதிவிடும் இணையதளங்களை பிளாக் செய்ய மனு!

துணிவு மற்றும் வாரிசு படங்களை சட்டவிரோதமாக வலைதளங்களில் பதிவிடும் இணையதளங்களை பிளாக் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கறிஞர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
 

advocate filed the petition in High Court block the illegal websites uploading the film Thunivu and Varisu Movies
Author
First Published Jan 9, 2023, 4:55 PM IST

அஜித் நடித்துள்ள துணிவு படமும், விஜய் நடித்துள்ள வாரிசு படமும் ஒரே நாளில் அதுவும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 11 ஆம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதலில் துணிவு படம் 12 ஆம் தேதி வெளியாகும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதே போன்று வாரிசு படமும் 12 ஆம் தேதி வெளியாகும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த இரு படங்களுமே வரும் 11 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கின்றன.

விஜய்யின் வாரிசு படத்தை பார்ப்பதற்கான 5 முக்கியமான காரணங்கள் என்னென்ன?

இந்த நிலையில், வாரிசு மற்றும் துணிவு ஆகிய இரு படங்களையும் சட்டவிரோதமாக வலைதளங்களில் பதிவிடும் இணையதளங்களை பிளாக் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணையை நாளை விசாரிப்பதாக நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

துணிவு படத்தை பார்ப்பதற்கான 5 முக்கியமான காரணங்கள் என்னென்ன?

நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் ஹெச் வினோத் - அஜித் குமார் காம்பினேஷனில் உருவாக்கப்பட்ட 3ஆவது படம் துணிவு. வங்கி கொள்ளையை ஒரு பகுதியாக வைத்து இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. அஜித் ரசிகர்களுக்காக என்று முதல் பகுதியும், மற்ற ரசிகர்களை கவரும் வகையில் 2 ஆம் பகுதியும் இருக்கும் என்று இயக்குநர் கூறியிருந்தார். துணிவு படத்தில் அஜித் குமார் உடன் இணைந்து மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, பிரேம் குமார், பகவதி பெருமாள், ஜிபி முத்து, மோகன சுந்தரம், அஜய், சிபி புவனா சந்திரன், சிராக் ஜானி, மமதி சாரி, மகாநதி சங்கர் ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.

கணவர் நடித்த துணிவு படத்தை பிரிவியூ ஷோ பார்த்த மனைவி ஷாலினி!

போனி கபூர் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இவரது இசையில் வந்த காசேதான் கடவுளடா, கேங்ஸ்டா, ஜில்லா ஜில்லா ஆகிய பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளன. அதே போன்று துணிவு படத்தின் டிரைலரும் காண்போரை வியக்க வைத்துள்ளது.

தொடர்ந்து தோல்வி படங்கள் கொடுத்து விஷால் மார்க்கெட்டை இழக்கிறாரா?

முழுக்க முழுக்க குடும்ப கதையை மையப்படுத்திய வாரிசு படத்தில் விஜய் உடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, ஸ்ரீமன், ஷாம், பிரகாஷ் ராஜ், குஷ்பு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சரத்குமார், பிரபு, யோகி பாபு, சதீஷ், சங்கீதா, சம்யுக்தா, சுமன், ஜான் விஜய், விடிவி கணேஷ், கணேஷ் வெங்கட்ராமன், நந்தினி ராய் என்று ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இயக்குநர் வம்சி இதற்கு முன்னதாக மகேஷ் பாபு நடித்த மகரிஷி படத்தையும், கார்த்தி, நாகர்ஜூனா நடித்த தோழா படத்தையும், பிருந்தாவன் என்ற படத்தையும் இயக்கியிருந்தார். வாரிசு படத்தையும் சேர்த்து மொத்தமாக 6 படங்களை இயக்கியுள்ளார்.

அடேங்கப்பா... வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க ராஷ்மிகா வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா..!

இந்தப் படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இவரது இசையில் உருவாக்கப்பட்டுள்ள ஒவ்வொரு பாடல்களும் விஜய் ரசிகர்களை வியக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது. அதிலேயும், ரஞ்சிதமே, தீ தளபதி, வா தலைவா, ஜிமிக்கி பொண்ணு ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு வாரிசு டிரைலர் வெளியாகி சமூக வலைதளங்களில் டிரெண்டானது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios