தொடர்ந்து தோல்வி படங்கள் கொடுத்து விஷால் மார்க்கெட்டை இழக்கிறாரா?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் விஷால் தற்போது தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து வருகிறார்.

விஷால் படங்கள்:
அதன் பிறகு சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி, மலைக்கோட்டை, வெடி, பூஜை, துப்பறிவாளன், இரும்பு திரை, சண்டக்கோழி 2, ஆக்ஷன், சக்ரா, எனிமி, வீரமே வாகை சூடவா, லத்தி என்று பல படங்களில் நடித்துள்ளார்.
தயாரிப்பாளர்
நடிகர் மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் திகழ்கிறார். நாம் ஒருவர் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கியுள்ளார்.
எனிமி
கடைசியாக இவர் நடித்த சண்டக்கோழி 2 படம் தான் ரசிகர்களிடையே நலல் வரவேற்பு பெற்றுள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து நடித்த அயோக்யா, ஆக்ஷன், சக்ரா, எனிமி ஆகிய படங்கள் வரிசையாக தோல்வி படங்களாக அமைந்துள்ளன.
லத்தி
இயக்குநர் வினோத் குமார் இயக்கத்தில் விஷால், பிரபு, சுனைனா, தலைவாசல் விஜய், முனீஷ்காந்த், ரமணா, வெங்கடேஷ் ஆகியோர் பலரது நடிப்பில் உருவான லத்தி படம் கடந்த ஆண்டு டிசம்பர் 22 ஆம் தேதி வெளியானது.
மார்க்கெட்டை இழக்கும் விஷால்
ஆக்ஷன் த்ரில்லர் கதையை மையப்படுத்திய இந்தப் படம் விமர்சன ரீதியாக போதுமான வரவேற்பை பெறவில்லை. இதற்கு முன்னதாக நடித்த விஷாலின் எந்தப் படமும் போதுமான வரவேற்பு பெறவில்லை. இதன் மூலம் தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து வரும் விஷால் சினிமாவில் தனது மார்க்கெட்டை இழந்து வருவதாக சொல்லப்படுகிறது.
துப்பறிவாளன் 2
எனினும், மார்க் ஆண்டனி, துப்பறிவாளன் 2 என்று 2 படங்கள் கைவசம் வைத்துள்ள நிலையில், அந்த இரு படங்களும் விஷாலுக்கு ஹிட் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.