ஷங்கர் மகள் அதிதியின் அடுத்த டார்கெட் விஜய்யா?... ரோல்ஸ் ராய்ஸ் காரில் குத்தாட்டம் போட்ட வீடியோ வைரல்

ரோல்ஸ் ராய்ஸ் காரில் சென்றபோது நடிகர் விஜய் பாடிய பாடலுக்கு ஆட்டம் போட்ட வீடியோவை இயக்குனர் ஷங்கர் மகள் அதிதி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

Aditi shankar vibes for Thalapathy vijay's Leo movie Naa Ready song in Rolls Royce car gan

இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி தற்போது தமிழ் சினிமாவில் பிசியான நடிகையாக வலம் வருகிறார். முத்தையா இயக்கிய விருமன் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் அதிதி. அப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்த அதிதி, முதல் படத்திலேயே பிளாக்பஸ்டர் வெற்றி கண்டார். அப்படத்தில் கிராமத்துப் பெண்ணாக நடித்து அனைவரையும் அசர வைத்தார் அதிதி. அவரது நடிப்புக்கு பாராட்டுக்களும் கிடைத்தன.

விருமன் படத்தில் நடித்து முடித்த கையோடு, சிவகார்த்திகேயனின் மாவீரன் பட வாய்ப்பையும் தட்டி தூக்கினார் அதிதி. இப்படமும் கடந்த ஜூலை மாதம் திரைக்கு வந்து பாக்ஸ் ஆபிஸில் சக்கைப்போடு போட்டது. தொடர்ந்து 2 படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதால் ராசியான ஹீரோயின் என பெயரெடுத்த அதிதிக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் குவிந்த வண்ணம் உள்ளன. அவர் தற்போது விஷ்ணுவர்தன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

இதையும் படியுங்கள்... இனி எண்ணலாம் நடக்கபோகுதோ..? ஆனா கிளாமருக்கு பஞ்சமிருக்காது - பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையும் நடிகை கிரண்!

இதையடுத்து ராட்சசன் படத்தின் இயக்குனர் ராம்குமார் இயக்கும் புதிய திரைப்படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடிக்க கமிட் ஆகி உள்ளார். இதுதவிர சுதா கொங்கரா இயக்கத்தில் தயாராக உள்ள சூர்யா 43 படத்திலும் நடிகை அதிதியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இப்படி அடுத்தடுத்து பட வாய்ப்புகளை தட்டிதூக்கும் அதிதி, இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட ரீல்ஸ் வீடியோ தற்போது செம்ம வைரலாகி வருகிறது.

அதன்படி ரோல்ஸ் ராய்ஸ் காரில் சென்றபோது விஜய்யின் லியோ படத்தில் இடம்பெறும் நா ரெடி பாடலுக்கு குத்தட்டம் போட்டுள்ளார் அதிதி. அந்த வீடியோ தான் தற்போது செம்ம வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த சிலர் விஜய் பட வாய்ப்பை பிடிக்க தான் அதிதி இப்படி ஆட்டம்போட்டுள்ளதாக கமெண்ட் செய்து வருகின்றனர். ஒரு சிலரோ இது ரொம்ப கிரிஞ் ஆக இருப்பதாக அதிதியை கிண்டலடித்து வருகின்றனர். 

இதையும் படியுங்கள்... செம்ம மாஸா இருக்கே... இத ஏன் படத்துல வைக்கல? ஜெய் பீமில் இப்படி ஒரு சண்டைக் காட்சியா? வைரலாகும் டெலிடெட் சீன்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios