இனி எண்ணலாம் நடக்கபோகுதோ..? ஆனா கிளாமருக்கு பஞ்சமிருக்காது - பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையும் நடிகை கிரண்!
பிரபல நடிகை கிரண் இறுதியாக தமிழில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான இளமை ஊஞ்சல் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் இப்பொழுது அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.
Kiran Rathod
கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான ஒரு ஹிந்தி திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர்தான் கிரண், இவர் ராஜஸ்தான் மாநிலத்தில் பிறந்தவர். கடந்த 22 ஆண்டுகளாக சினிமா துறையில் பயணித்து வருகின்றார்.
Actress Kiran Rathod
அந்த ஹிந்தி படத்தை தொடர்ந்து கடந்த 2002ம் ஆண்டு பிரபல நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி திரைப்படத்தில் மனுஷா என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் மொழியில் அறிமுகமானார் நடிகை கிரண். முதல் படத்திலேயே இவருக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது.
Actress Kiran
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னடம் என்று பல மொழிகளில் இவர் நடித்துள்ளார். மேலும் தளபதி விஜய், தல அஜித், சீயான் விக்ரம் போன்ற பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகவும் இவர் நடித்துள்ளார்.
Actress Kiran Big Boss Season 7
தொடர்ச்சியாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் கிரண், தற்பொழுது தளபதி விஜயின் லியோ திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார் என்பது குறிப்பிடப்பட்டது. இந்த சூழலில் தெலுங்கு மொழியில் வெளியாகவுள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவர் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். இது குறித்து அதிகாரப்பூர் தகவல் வெளியாகி உள்ளது.