செம்ம மாஸா இருக்கே... இத ஏன் படத்துல வைக்கல? ஜெய் பீமில் இப்படி ஒரு சண்டைக் காட்சியா? வைரலாகும் டெலிடெட் சீன்
சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட மாஸ் ஆன சண்டைக் காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சூர்யா நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த திரைப்படம் ஜெய் பீம். த.செ.ஞானவேல் இயக்கிய இப்படத்தில் நடிகர் சூர்யாவுடன் மணிகண்டன், லிஜோ மோல் ஜோஸ், ரெஜிஷா விஜயன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்தில் நடிகர் சூர்யா, வக்கீலாக நடித்திருந்தார். உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தியது.
ஜெய் பீம் படத்துக்கு தேசிய விருது கிடைக்கும் என எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இப்படத்திற்கு ஒரு விருது கூட வழங்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு கண்டனங்களும் குவிந்தன. இது ஒருபுறம் இருக்க, ஜெய் பீம் படத்தில் இருந்து மாஸான டெலிடெட் சீன் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் இவ்ளோ அருமையாக இருக்கும் இந்த சீனை ஏன் நீக்கினார்கள் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... அனிருத்துக்கு காசு மட்டும் அல்ல... 3 புது காரை நிறுத்தி ஆசை பட்டதை தேர்வு செய்ய சொன்ன கலாநிதி! வைரல் வீடியோ
அந்த காட்சியில் பதிவு திருமணம் செய்துகொண்டு வெளியே வரும் காதல் ஜோடியை ரெளடி கும்பல் ஒன்று கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சிக்கிறது. அவர்களை அடித்து துவம்சம் செய்துவிட்டு நடிகர் சூர்யா அந்த ஜோடியை காப்பாற்றும் சீன் தான் அது. ஜெய் பீம் படத்தை இந்தி தொலைக்காட்சி ஒன்று ஒளிபரப்பும் போது, அந்த சண்டைக் காட்சியை சேர்த்து ஒளிபரப்பி உள்ளனர். அதுதான் தற்போது வைரலாகி வருகிறது.
இதேபோல் தான் சூர்யா நடிப்பில் இதற்கு முன் வெளிவந்த சூரரைப் போற்று திரைப்படத்திலும் ஒரு மாஸான சண்டைக் காட்சியை நீக்கி இருந்தனர். தற்போது அதேபோன்று ஒரு காட்சி ஜெய் பீம் படத்தில் இருந்து நீக்கப்பட்டு இருந்ததை அறிந்த ரசிகர்கள், இதை படத்தில் வைத்திருந்தால் சூப்பராக இருந்திருக்கும் என தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... ஜவான் படத்தை எப்படியாவது ஓட வச்சிரு ஆண்டவா.. ஷாருக்கான், நயன்தாரா திருப்பதியில் சாமி தரிசனம்..