இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் ' Y NOT ஸ்டுடியோஸ்' தயாரிப்பில் அறிமுக இயக்குனர், ப்ரிதிவி ஆதித்யா இயக்கவுள்ள விளையாட்டு சம்பந்தமான படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக உள்ளார். 

ஏற்கனவே இந்த தகவல் வெளியான நிலையில், தற்போது இந்த படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு ஜோடியாக நடிக்க உள்ள நடிகர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழில், 'மிருகம்', 'ஈரம்', 'அரவான்', 'யாகாவாராயினும் நாகாக்க' உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்தவர் நடிகர் ஆதி. தான் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். இவர் கடைசியாக தமிழில் வெளியான மரகத நாணயம் என்கிற ஹாரர் படத்தில் நடித்திருந்தார். 

இந்த படத்தை தொடர்ந்து, சமீபகாலமாக தெலுங்கில் அதிக கவனம் செலுத்தி வந்தார்.  இந்நிலையில் தற்போது கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில், இவர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.