பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து ரா ஒன், சென்னை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பாளர் கரீம் மோரானி. இவருக்கு கடந்த வாரம் செய்யப்பட்ட கொரோனா பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கரீம் மோரானிக்கு முறையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.

இந்நிலையில் இலங்கையில் இருந்து திரும்பிய கரீம் மோரானியின் இளைய மகள் ஷாஸாவுக்கும், ராஜஸ்தானில் இருந்து வந்த அவரது மூத்த மகள் சோவா மோரானிக்கும் கொரோனா வைரஸ் சோதனை செய்யப்பட்டது. இதில் எவ்வித அறிகுறிகளும் இல்லாத ஷாஸாவையும் சேர்ந்து கரீம் மோரானியின் இரண்டு மகள்களுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இருவரும் தந்தை சிகிச்சை பெறும் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 

இந்நிலையில் காய்ச்சல், மூச்சு திணறல் உள்ளிட்ட கொரோனா அறிகுறிகளுடன் சோவா மோரானி கடந்த ஏப்ரல் 7ம் தேதி முதல் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது இரண்டாவது முறையாக சோவாவுக்கு நடத்தப்பட்ட சோதனையில் அவருக்கு வைரஸ் தொற்று குணமடைந்துள்ளது உறுதியாகியுள்ளது. இதையடுத்து ஐசியூவில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள சோவா தனது சோசியல் மீடியாவில் மருத்துவ பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: பிரபல டி.வி. தொகுப்பாளினி மீது வீடு புகுந்து தாக்குதல்... கொரோனா ஊரடங்கில் ஏற்பட்ட பரிதாபம்...!

மேலும், ஒவ்வொரு தனி நபராக கண்காணித்து, அவர்களின் பாதுகாப்பிற்கான முன்னெச்சரிக்கைகளை நடவடிக்கைகளை எடுத்து வரும் அரசுக்கு நன்றி கூற விரும்புகிறேன். நான் உடல்நலம் பெற வேண்டி சோசியல் மீடியா மூலமாக வாழ்த்திய, எனக்காக பிரார்த்தி அனைவருக்கும் நன்றி. அனைவரும் பாதுகாப்பாக இருங்கள், அரசின் அனைத்து விதிகளையும் பின்பற்றுங்கள், ஏனென்றால் நம்முடைய பாதுகாப்பிற்காக ஏராளமானோர் தங்களது உயிரை பணயம் வைத்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: சன்னி லியோனுக்கே டப் கொடுக்கும் பிரபல நடிகை... ஓவர் கிளாமர் போட்டோஸை பார்த்து திக்குமுக்காடும் ரசிகர்கள்...!

அதில், எனது கொரோனா வாரியஸுக்கு குட்பை சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது. அவர்களுக்காக என்றேன்றும் பிரார்த்திக்கிறேன். குட்பை தனிமைப்படுத்தப்பட்ட ஐ.சி.யூ. என்று  வீட்டிற்கு திரும்ப உள்ள சந்தோஷத்தை செம்ம குஷியாக பகிர்ந்துகொண்டுள்ளார். இவரது தங்கை ஷாஸா சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்றிலிருந்து மீண்ட நிலையில், சோவாவும் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். தயாரிப்பாளர் கரீம் மோரானிக்கு கொரோனா தொற்று மீண்டும் உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.