Yashika aannand: இதற்கு நான் செத்தே இருக்கலாம்..! ரசிகரின் கேள்வியால் மனம் உடைந்த யாஷிகா! ஷாக்கான ரசிகர்கள்.!

Yashika aannand: நடிகை யாஷிகா ஆனந்திடம், ரசிகர் ஒருவர் தோழியின் இறப்பு குறித்து மனம் புண்படுத்தும் வகையில் கேள்வி எழுப்பியுள்ளார். 

Actress yashika aannand replies to fans questions about drunk driving caused

நடிகை யாஷிகா ஆனந்திடம், ரசிகர் ஒருவர் தோழியின் இறப்பு குறித்து மனம் புண்படுத்தும் வகையில் கேள்வி எழுப்பியுள்ளார். 

கவர்ச்சி நடிகை யாஷிகா ஆனந்த்:

மாடலிங், சினிமா என இரட்டை துறையில் பிசியாக வலம் வரும் யாஷிகா ஆனந்த், கவலை வேண்டாம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.

Actress yashika aannand replies to fans questions about drunk driving caused

இருப்பினும், இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்திலேயே மிரட்டல் கவர்ச்சியை காட்டி அதிக ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார். இதையடுத்து, அவருடைய கவர்ச்சி கை மேல் பலன் கொடுக்க ரகுமானின் ‘துருவங்கள் 16’, விஜய் தேவரகொண்டாவின் ‘நோட்டா’, யோகி பாபுவின் ‘ஜாம்பி’ ஆகிய படங்களில் நடித்தார். 

பிக்பாஸ் நிகழ்ச்சி:

இதில் எந்த படமும் அவருக்கு பெரிதாக கைக்கொடுக்கவில்லை. அதன் பின்னர், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து  கொண்டு பிரபலமான யாஷிகா, பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவன்தான் உத்தமன், ஆரவ்வுடன் ராஜ பீம்மா, எஸ் ஜே சூர்யாவுடன் கடமையை செய், பாம்பாட்டம் ஆகிய படங்கள் நடித்துள்ளார்.

Actress yashika aannand replies to fans questions about drunk driving caused

விபத்தில் சிக்கிய யாஷிகா ஆனந்த்:

இதையடுத்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பாக மோசமான கார் விபத்து ஒன்றில் சிக்கினார். கடந்த ஆண்டு ஜூலை 25ம் தேதி அதிகாலை ஒரு மணி அளவில் தோழியுடன் பார்ட்டியை கொண்டாட புதுச்சேரி சென்ற யாஷிகாவுக்கு திடீர் என விபத்து ஏற்பட்டது. 

Actress yashika aannand replies to fans questions about drunk driving caused

இந்த விபத்தில் யாஷிகா ஆனந்தின் தோழியான ஐதராபாத்தைச் சேர்ந்த பெண் இன்ஜினியர், வள்ளி செட்டி பவணி விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தில்  யாஷிகா ஆனந்த்திற்கு, முதுகு, வயிறு, கால் என பல இடங்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டதை தொடர்ந்து சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது முழுவதுமாக உடல்நிலை தேறியுள்ள யாஷிகா மீண்டும் இணையத்தில் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். 

ரசிகரின் கேள்விக்கு யாஷிகாவின் உருக்கமான பதில்:

இந்நிலையில், யாஷிகாவின் ட்விட்டர் பக்கத்தில் அவரின் ரசிகர் ஒருவர், நீங்கள் குடித்துவிட்டு விபத்தை ஏற்படுத்திய வழக்கின் தற்போது நிலை என்ன? உங்கள் தோழியை கொன்ற பின் எப்படி உணர்கிறீர்கள் என மனதை புண்படுத்தும் வகையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

Actress yashika aannand replies to fans questions about drunk driving caused

இந்த கேள்விக்கு பதிலளித்துள்ள யாஷிகா, விபத்தின் போது நான் குடிக்கவில்லை. நான் குடிக்கவில்லை என மெடிக்கல் ரிப்போட்டில் உள்ளது. தயவு செய்து மீண்டும் மீண்டும் அப்படி பதிவிட்டு என்னுடைய மனதை காயப்படுத்தாதீர்கள். இந்த விபத்தில் நான் செத்திருந்தால் கூட நன்றாக இருந்து இருக்கும் என்று வருத்தத்துடன் பதிவிட்டிருந்தார். பின்னர், சில மணி நேரங்களில் அந்த ட்விட்டை டெலிட் செய்து விட்டார்

 மேலும்  படிக்க ...Alia Bhatt : RRR பட போட்டோஸை நீக்கியது நிஜம் தான்... ராஜமவுலி மீது கோபமா? - உண்மையை போட்டுடைத்த ஆலியா பட்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios