Asianet News TamilAsianet News Tamil

’எந்தப் படத்திலும் கிடைக்காத அந்த அனுபவம் இந்தப் படத்தில் கிடைத்தது’...நடிகை வசுந்தராதாஸ் சொல்றாங்க பாஸ்...

ஒரு சிறிய இடவெளிக்குப் பின் மீண்டும் ‘பக்ரித்’ படத்தின் மூலம் ரசிகர்களைச் சந்திக்க வரும் நடிகை வசுந்தரா தாஸ் ‘இந்தப் படத்தில் கிடைத்த அனுபவம் போல எனக்கு வேறு எந்தப் படத்திலும் கிடைத்ததில்லை’என்று சஸ்பென்ஸ் வைக்கிறார்.

actress vasunthara about bagrith movie
Author
Chennai, First Published Jun 28, 2019, 11:17 AM IST

ஒரு சிறிய இடவெளிக்குப் பின் மீண்டும் ‘பக்ரித்’ படத்தின் மூலம் ரசிகர்களைச் சந்திக்க வரும் நடிகை வசுந்தரா தாஸ் ‘இந்தப் படத்தில் கிடைத்த அனுபவம் போல எனக்கு வேறு எந்தப் படத்திலும் கிடைத்ததில்லை’என்று சஸ்பென்ஸ் வைக்கிறார்.actress vasunthara about bagrith movie

எம்10 புரொடக்‌ஷன் சார்பில் எம்.எஸ்.முருகராஜ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘பக்ரீத்’. இதில் விக்ராந்த் நாயகனாகவும் வசுந்தரா நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். மேலும் ரோகித் பதாக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஒட்டகத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இப்படத்தை இயக்கியதோடு மட்டுமில்லாமல் ஒளிப்பதிவும் செய்திருக்கிறார் ஜெகதீசன் சுபு. டி.இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் முருகராஜ், இயக்குனர் ஜெகதீசன் சுபு, நாயகன் விக்ராந்த், நாயகி வசுந்தரா, நடிகர் ரோகிப் பதாக், மோக்லி, பேபி ஸ்ரூத்தீகா, பாடலாசிரியர்கள் ஞானகரவேல், மணிஅமுதவன், கலை இயக்குனர் மதன் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

விக்ராந்த் பேசும்போது,
 ‘நான் சினிமா உலகிற்கு வந்து 11 வருடம் ஆகுது. ஆனால் இந்த மேடை எனக்கு ரொம்ப புதுசு. இப்போது பெரிய நம்பிக்கையோடு நிற்கிறேன். இந்தப்படம் அந்த தைரியத்தைக் கொடுத்து இருக்கிறது. கண்டிப்பாக இந்தப்படம் போல ஒருபடம் இதுவரை வந்ததில்லை. இனியும் வராது. இயக்குநர் ஜெகதீசன் அவர்களோடு மீண்டும் வேலை பண்ணவேண்டும். தயாரிப்பாளர் முருகராஜ் அண்ணன் தான் இந்தப்படத்தை பெரிதாக கொண்டு வர வேண்டும் என்றார். இமான் சார் ரூபன் போன்றவர்கள் இந்தப்படத்திற்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வேலை செய்தார்கள். actress vasunthara about bagrith movie

முருகராஜ் அண்ணன் எனக்கு 13 வருடமாக தெரியும். நிறைய நொந்துவிட்டார். ஆனால் இந்தக் கதை மீது அவருக்கு பெரிய நம்பிக்கை. இந்த படத்தில் வரும் ஒட்டகத்தை கொண்டுவருவதற்கு அவ்வளவு சிரமப்பட்டார். ஓட்டகம் மீது நிறைய பஞ்சாயத்து இருக்கு. அந்த ஒட்டகத்தை அனுமதி வாங்கி கொண்டுவர 8 மாதங்கள் ஆகியது. ஒட்டகத்தை தத்தெடுத்து பயிற்சி கொடுத்து, அதனுடன் நாங்கள் பழக ஒரு மாதம் ஆகியது. மேலும் அந்த ஒட்டகத்தை 100 நாளில் ஒப்படைக்க வேண்டும் என்ற டெட்லைன் வேறு இருந்தது. ராஜஸ்தான், மத்திய பிரதேஷ் ஆகிய இடங்களுக்கு ஒட்டகத்தை அழைத்து சென்று படப்பிடிப்பு நடத்தினோம். வானிலை, மழை என பல பஞ்சாயத்து இருந்தது. உண்மையிலேயே தயாரிப்பாளருக்கும் ஒட்டகத்திற்கும் தான் பெரிய நன்றி சொல்லணும். இப்படத்தில் ஒரு கிராபிக்ஸ் காட்சிகள் கூட இல்லை. படத்தைப் பார்த்த அனைவருமே பெரிதாகப் பாராட்டி இருக்கிறார்கள். நிச்சயம் இந்த நல்ல படத்தை பத்திரிகையாளர்கள் மக்களிடம் கொண்டு சேர்ப்பார்கள் என்று நம்புகிறேன்’ என்றார்.

வசுந்தரா பேசும்போது,
 ‘நல்ல படங்களுக்கு பத்திரிகையாளர்கள் சப்போர்ட் பண்ணுவாங்க. இந்தியாவிலே ரொம்ப சிறந்த படமாக பக்ரீத் வந்திருக்கிறது. இந்தப் படத்தில் கிடைத்தது போன்ற ஒரு அனுபவம் எந்தப்படத்திலும் எனக்கு கிடைத்தது இல்லை. டி.இமான் சாரின் இசை மிக அற்புதமாக இருக்கிறது. இயக்குநர் ஜெகதீசன் சாருடன் தொடர்ந்து வேலை பண்ண வேண்டும் என்று எல்லா நடிகர்களுக்கும் தோன்றும். விக்ராந்த் மிகச் சிறப்பான நடிகர். நிச்சயம் படம் உங்களை அழ வைக்கும்’ என்றார்
. ஆனால் எந்தப் படத்திலும் கிடைக்காத இந்தப் படத்தில் கிடைத்த அந்த அனுபவத்தைப்பற்றி கடைசி வரை அவர் மூச் விடவில்லை.

Follow Us:
Download App:
  • android
  • ios