எனக்கு கல்யாணமா?... தீயாய் பரவிய வதந்தி குறித்து மனம் திறந்த வரலட்சுமி...!

இந்திய கிரிக்கெட் துறையில் முக்கிய பொறுப்பில் இருக்கும் சந்தீப் என்பவரை வரலட்சுமி சரத்குமார் திருமணம் செய்து உள்ளதாக கூறப்பட்டது. 

Actress Varalaxmi Sarathkumar Open Talk about her marriage Rumor

வில்லி, ஹீரோயின் என சகலவிதமான கேரக்டர்களிலும் கெத்து காட்டுபவர் வரலட்சுமி சரத்குமார். தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத குடும்பத்தின் வாரிசான இவர், மனதில் பட்டதை யாருக்கும் அஞ்சாமல் பளீச்சென பேசக்கூடியவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார். சோசியல் மீடியாவில் செம்ம ஆக்டிவாக வலம் வரும் வரலட்சுமி சரத்குமாருக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Actress Varalaxmi Sarathkumar Open Talk about her marriage Rumor

இதையும் படிங்க: ரணகளத்திலும் கிளுகிளுப்பு... அடல்ட் பட டீசரை வெளியிட்ட சர்ச்சை இயக்குநர்...!

இந்திய கிரிக்கெட் துறையில் முக்கிய பொறுப்பில் இருக்கும் சந்தீப் என்பவரை வரலட்சுமி சரத்குமார் திருமணம் செய்து உள்ளதாக கூறப்பட்டது. நடிகைகளின் திருமணம் குறித்து வதந்திகள் பரவுவது எப்போதும் நடக்கூடிய விஷயம் தான் என்றாலும், கோபமான வரலட்சுமி சரத்குமார் வதந்தி குறித்து விளக்கமளித்துள்ளார். 

Actress Varalaxmi Sarathkumar Open Talk about her marriage Rumor

இதையும் படிங்க: ஒட்டு துணி கூட இல்லாமல் உச்ச கட்ட ஆபாசம்... பலான காட்சிகளுக்கு பஞ்சமே இல்லாத சர்ச்சை இயக்குநரின் படம்...!

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், எனக்கு திருமணம் நடக்கப்போகிறது என்பதை எனக்கே கடைசியாக தான் சொல்கிறார்கள். ஹாஹாஹா... அதே முட்டாள்தனமான வதந்திகள்... ஏன் எல்லோரும் நான் திருமணம் செய்து கொள்வதில் இவ்வளவு அக்கறை செலுத்துகிறீர்கள். எனக்கு திருமணம் என்றால் நான் மொட்டை மாடியில் ஏறி நின்று கத்தி, உலகிற்கே சொல்லுவேன். எனது திருமணம் பற்றி எழுதும் பத்திரிகையாளர்களுக்கு சொல்கிறேன். நான் திருமணம் செய்து கொள்ளவோ, சினிமாவை விட்டு விலகவோ போவது இல்லை என்று பதிவிட்டுள்ளார். 
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios