MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Vishwanath And Sons OTT Release : ஓடிடிக்கு பார்சல் செய்யப்படும் விஸ்வநாத் அண்ட் சன்ஸ்... எப்போ ரிலீஸ் தெரியுமா?

Vishwanath And Sons OTT Release : ஓடிடிக்கு பார்சல் செய்யப்படும் விஸ்வநாத் அண்ட் சன்ஸ்... எப்போ ரிலீஸ் தெரியுமா?

Vishwanath And Sons OTT Streaming Date : வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடித்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் ஓடிடியில் எப்போ ரிலீஸ் ஆகும் என்பது குறித்த தகவல் கசிந்துள்ளது.

2 Min read
Author : Ganesh A
Published : Aug 24 2026, 10:04 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Vishwanath And Sons OTT Release
Image Credit : X

Vishwanath And Sons OTT Release

சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’. டோலிவுட்டைச் சேர்ந்த இயக்குநர் வெங்கீ அட்லூரி இயக்கியுள்ள இப்படத்தில் மமிதா பைஜு கதாநாயகியாக நடித்துள்ளார். ராதிகா, ரவீனா டாண்டன் உள்ளிட்ட முன்னணி நடிகைகளும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. வெளியான ஒரே வாரத்தில் ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாக தகவல்கள் வெளியாகின.

Vishwanath and Sons Review : சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ஒர்த்தா? ஒர்த் இல்லையா? முழு விமர்சனம் இதோ

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் பாக்ஸ் ஆபிஸ்
Image Credit : Asianet News

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் பாக்ஸ் ஆபிஸ்

இதனால், சூர்யாவின் திரைப்பயணத்தில் 200 கோடிக்கு மேல் வசூல் அள்ளி சாதனை படைத்த படங்களின் பட்டியலில் இது இடம்பெற்றுள்ளது. படத்தின் வெற்றிக்கு சூர்யாவின் நடிப்பு மட்டுமின்றி, மமிதா பைஜு, ராதிகா, ரவீனா டாண்டன் உள்ளிட்டோரின் பங்களிப்பும் முக்கிய காரணமாக அமைந்ததாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். வெங்கீ அட்லூரியின் இயக்கம் மற்றும் ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையும் படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது. குறிப்பாக குடும்ப உறவுகளை மையமாகக் கொண்ட காட்சிகள் படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

Related Articles

Related image1
Vishwanath and Sons Review : சூர்யாவின் ஃபீல் குட் படம் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ சூப்பரா? சுமாரா? விமர்சனம் இதோ
Related image2
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் vs மகுடம் பாக்ஸ் ஆபிஸ்... வசூலில் செஞ்சுரி அடித்த சூர்யா; கிளீன் போல்டு ஆன விஷால்...!
35
தமிழை விட தெலுங்கில் அதிக வசூல்
Image Credit : Asianet News

தமிழை விட தெலுங்கில் அதிக வசூல்

புதிய திரைப்படங்கள் தொடர்ந்து வெளியான நிலையிலும், ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ படத்திற்கு திரையரங்குகளில் வரவேற்பு தொடர்ந்து வருகிறது. மேலும், இப்படத்தின் வசூலில் தமிழ் மார்க்கெட்டை விட தெலுங்கு மாநிலங்களில் அதிக வரவேற்பு கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படத்தை ஓடிடியில் எப்போது பார்க்கலாம் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. அப்படத்தின் ஓடிடி ரிலீஸ் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

45
ஓடிடி ரிலீஸ் எப்போது?
Image Credit : Asianet News

ஓடிடி ரிலீஸ் எப்போது?

இதற்கிடையே, ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை பிரபல ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திரையரங்கு வெளியீட்டுக்கு நான்கு வாரங்கள் கழித்து படத்தை ஓடிடியில் வெளியிடும் வகையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்தக் கணக்கின்படி, செப்டம்பர் 14ஆம் தேதி முதல் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ ஓடிடியில் வெளியாக வாய்ப்புள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. மேலும், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

55
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் டீம்
Image Credit : X

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் டீம்

எனினும், ஓடிடி வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவர வாய்ப்புள்ளது. சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் சார்பில் நாக வம்சி தயாரித்துள்ள இப்படத்தில் நாசர், சுனில் ரெட்டி, ராஜீவ் மேனன், ஹர்ஷா செமுடு, காளி வெங்கட், தீபா சங்கர், ஹைப்பர் ஆதி, மைம் கோபி, சர்வதமன் பானர்ஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். திரையரங்குகளில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’, ஓடிடியில் வெளியாகும் போது எந்த அளவுக்கு வரவேற்பைப் பெறும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சூர்யா
ஓடிடி

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss 10 : ஓடவும் முடியாது... ஒளியவும் முடியாது..! அதகளமாக ஆரம்பமாகும் பிக் பாஸ் சீசன் 10 - தேதி அறிவித்த விஜய் சேதுபதி..!
Recommended image2
Jailer 2 : மொழி சர்ச்சையில் சிக்கிய அல்ல பொலெலோ பாடல்... பதறிப்போய் விளக்கம் கொடுத்த அருண்ராஜா காமராஜ்
Recommended image3
Bigg Boss Common Man : கரிஷ்மாவுக்கு ரெட் ஸ்டார்... கில்லி போல் சொல்லி அடித்த முனியம்மா; மெர்சலான ஆரி..!
Related Stories
Recommended image1
Vishwanath and Sons Review : சூர்யாவின் ஃபீல் குட் படம் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ சூப்பரா? சுமாரா? விமர்சனம் இதோ
Recommended image2
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் vs மகுடம் பாக்ஸ் ஆபிஸ்... வசூலில் செஞ்சுரி அடித்த சூர்யா; கிளீன் போல்டு ஆன விஷால்...!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved