விஜய் நடித்து வரும் மெர்சல் படத்தின் விளம்பரத்திற்கு புதிய டெக்னாலஜியை பயன்படுத்துகிறார் நடிகை விஷாகா சிங்.

அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் மெர்சல்.

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

“பிடிச்சிருக்கு, கண்ணா லட்டு தின்ன ஆசையா” போன்ற படங்களின் மூலம் பிரபலமான நடிகை விஷாகா சிங் தற்போது நடிப்பைத் தொடர்ந்து பிஸினஸ் செய்வதிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.

இந்த நிலையில், தன்னுடைய பிஸினஸ் நிறுவனத்தின் மூலம் புதிய டெக்னாலஜி ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார்.

ஃபேஸ்புக்கில் கொடுக்கப்பட்டிருக்கும் லிங்க் மூலமாக ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் மெசேஞ்சருக்கு சென்றால், அதிலிருந்து மெர்சல் போஸ்டர் ரசிகர்களாகிய உங்களுக்கு வந்து சேரும்.

இந்த டெக்னாலஜி விஜய்யின் மெர்சல் படத்திற்குத்தான் முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்பது கொசுறு தகவல்.