தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைப்பதற்கு முன்பே மாடலிங் துறையை ஒரு கலக்கு கலக்கியவர் த்ரிஷா. அதன் பின்னர் 1999ம் ஆண்டு பிரசாந்த், சிம்ரன் நடித்த ஜோடி படத்தில், சிம்ரனுக்கு தோழியாக அறிமுகமானார். அதன் பின்னர் 2002ம் ஆண்டு இயக்குநர் அமீரின் மெளனம் பேசியதே திரைப்படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அதன்படி பார்த்தால், த்ரிஷா திரையுலகில் நாயகியாக வலம் வர ஆரம்பித்து 18 ஆண்டுகள் ஆகிறது. 

இன்று வரையிலும் கோலிவுட்டிலும், டோலிவுட்டிலும் முன்னணி நடிகையாக நடித்து வரும் த்ரிஷா, மலையாளத்தில் மோகன் லால் உடன் ராம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா என்ற படத்தில் நடிக்கவிருந்தார். டோலிவுட்டின் முன்னணி இயக்குநரான கொரட்டலா சிவா இயக்கி வருகிறார். 5 வருடத்திற்கு பிறகு தெலுங்கு சூப்பர் ஸ்டாருடன் சேர்ந்து கிடைத்த வாய்ப்பை த்ரிஷா வேண்டாம் என உதறி தள்ளிவிட்டு, படத்தில் இருந்து விலகியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படிங்க: புதுமையாக சேலை கட்டி... அசத்தலாக போஸ் கொடுத்த நிறைமாத கர்ப்பிணி ஆல்யா மானசா...வைரலாகும் போட்டோஸ்...!

இதுகுறித்து த்ரிஷா பதிவிட்டுள்ள ட்வீட்டில், சில சமயங்களில் ஆரம்ப கட்டத்தில் சொல்லப்பட்ட, ஆலோசிக்கப்பட்ட விஷயங்கள், திடீரென முற்றிலும் மாறிவிடுகிறது. படைப்பில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சிரஞ்சீவி சாரின் படத்தில் இருந்து விலகுகிறேன். படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள். என் அன்புடைய தெலுங்கு ரசிகர்களே உங்களை மறுபடியும் எனது அடுத்த படத்தில் சந்திக்கிறேன். என்று பதிவிட்டுள்ளார். 

இதையும் படிங்க: "எனக்கு அசல் தான் வேணும்"... இளம் முன்னணி நடிகரை வம்பிழுக்கும் சர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி...!

த்ரிஷாவின் இந்த திடீர் முடிவு தெலுங்கு திரையுலகில் பரபரப்பை கிளப்பியுள்ளது. திடீரென த்ரிஷா எடுத்த இந்த முடிவால் அதிர்ச்சியில் உள்ள படக்குழு, கதைக்கு பொருத்தமான ஹீரோயினை தேடும் பணியில் தீவிரமாக இறங்கிவிட்டார்களாம். த்ரிஷாவின் இந்த முடிவுக்கு காரணம் மெகா ஸ்டார் சிரஞ்சீவி தான் என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் ரெஜினா ஒரு பாடலுக்கு ஆடியுள்ளாராம். அது குறித்து விழா ஒன்றில் பேசிய சிரஞ்சீவி, ரெஜினாவின் ஆட்டத்தை ஆகா... ஓஹோ... என புகழ்ந்து தள்ளியுள்ளார். அதுவும் த்ரிஷாவை வெறுப்பேற்றிவிட்டதாக கூறப்படுகிறது.