சிம்ரனுக்கு அடுத்து த்ரிஷா... குட்டை டவுசரில் கெட்ட ஆட்டம் போட்டு டிக்-டாக்...!
“Savage” என்ற ஆங்கில பாடலுக்கு டிக்-டாக் செய்து த்ரிஷா வெளியிட்டுள்ள வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலாகி வருகிறது.
ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் இதையெல்லாம் கடந்து தற்போதைய இளம் தலைமுறையினரை அதிகம் கவர்ந்திருப்பது டிக்-டாக். சாமானியர்களை கடந்து பாலிவுட், டோலிவுட், கோலிவுட் திரைப்பிரபலங்களும் டிக்-டாக்கில் இணைந்துள்ளனர். தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், வீட்டிற்குள் இருக்கும் பிரபலங்கள் பலரும் பொழுது போக்க வழியில்லாததால் டிக்-டாக்கில் இணைந்து டைம் பாஸ் செய்து வருகின்றனர்.
அப்படி சமீபத்தில் டிக்-டாக்கில் இணைந்த திரைப்பிரபலம் நம்ம இடையழகி சிம்ரன். அஜித்துடன் சிம்ரன் நடித்த வாலி பட பாடலுக்கு அசத்தலாக டிக்-டாக் செய்து, ரசிகர்களை கிறங்கடித்தார். இந்த லிஸ்டில் இப்போது புதிதாக இணைந்திருக்கிறார் பிரபல நடிகை த்ரிஷா.
இதையும் படிங்க: 15 வயசிலேயே இப்படியா?... முன்னணி ஹீரோயின்களை கதறவிடும் அனிகா... வைரலாகும் போட்டோ....!
மணிரத்னத்தின் கனவு படமான “பொன்னியின் செல்வன்” படத்தில் த்ரிஷா நடிக்க உள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் அனைத்து விதமான படப்பிடிப்புகளும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. தற்போது கிடைத்துள்ள இந்த பொன்னான நேரத்தை ரசிகர்களுடன் சேர்ந்து செலவிட முடிவு செய்த த்ரிஷா, டிக்-டாக்கில் இணைந்துள்ளார்.
இதையும் படிங்க: விஜய்க்கு அடுத்து விஜய் சேதுபதிக்கு வரும் ஆப்பு... எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டார் போலயே...!
“Savage” என்ற ஆங்கில பாடலுக்கு டிக்-டாக் செய்து த்ரிஷா வெளியிட்டுள்ள வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலாகி வருகிறது. குட்டை டவுசரில் மாஸ் ஆட்டம் போட்டுள்ள த்ரிஷாவின் வீடியோ சில மணி நேரங்களிலேயே ஆயிரக்கணக்கானோர் கண்டு களித்துள்ளனர்.