விஜய்க்கு அடுத்து விஜய் சேதுபதிக்கு வரும் ஆப்பு... எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டார் போலயே...!

இந்த படத்தில் இருந்து ஏற்கனவே விஜய் சேதுபதியின் இரண்டு கெட்டப் போஸ்டர்கள் வெளியான நிலையில் தற்போது 3வது போஸ்டர் வெளியாகியுள்ளது. 

Vijay Sethupathi Uppena Movie 3rd Look Poster With Smoking Create new issue

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய்க்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய்சேதுபதி "மாஸ்டர்" படத்தில் நடித்து முடித்துள்ளார். நான் எல்லாம் யார் தெரியுமா? தமிழ் சினிமாவிலேயே முன்னணி நடிகர் என்ற கெத்து எல்லாம் இல்லாமல். வெயிட்டான கதாபாத்திரம் என்றால் வில்லன் வேடத்திற்கு கூட ஓகே சொல்லிவிடுகிறார். தமிழைத் தாண்டி தற்போது தெலுங்கிலும் வில்லனாக வேஷம் கட்ட ஆரம்பித்துவிட்டார் மக்கள் செல்வன். 

Vijay Sethupathi Uppena Movie 3rd Look Poster With Smoking Create new issue

புச்சிபாபு சனா இயக்கத்தில் வைஷ்ணவ் தேஜ் ஹீரோவாக நடித்துள்ள படம் "உப்பெனா". இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். இதில் ஹீரோயினின் அப்பாவாக விஜய் சேதுபதி நடித்துள்ளதாக கூறப்படுகிறது. அதனால் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. 

Vijay Sethupathi Uppena Movie 3rd Look Poster With Smoking Create new issue

இதையும் படிங்க: 15 வயசிலேயே இப்படியா?... முன்னணி ஹீரோயின்களை கதறவிடும் அனிகா... வைரலாகும் போட்டோ....!

இந்த படத்தில் விஜய் சேதுபதியின் பெயர் ரயனம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. படத்தில் விஜய் சேதுபதி டேரரான வில்லனாக நடித்திருப்பார் போல, அதனால் தான் பெயரைக்கூட இப்படி வித்தியாசமாக வைத்துள்ளனர் என தெலுங்கு ரசிகர்கள் வியந்து வருகின்றனர். 

இந்த படத்தில் இருந்து ஏற்கனவே விஜய் சேதுபதியின் இரண்டு கெட்டப் போஸ்டர்கள் வெளியான நிலையில் தற்போது 3வது போஸ்டர் வெளியாகியுள்ளது. 

Vijay Sethupathi Uppena Movie 3rd Look Poster With Smoking Create new issue

ஏற்கனவே விஜய் சேதுபதியின் இரண்டு போஸ்டர்கள் வெளியாகி வைரலான நிலையில், தற்போது வில்லனுக்கே உரிய கம்பீரமான, கெத்தான, மாஸான தோற்றம் கொண்ட புதிய புகைப்படம் வெளியாகியுள்ளது. சிகரெட் பிடித்தபடி நாற்காலியில் அமர்ந்து கொண்டு கால்மேல் கால்போட்டு இருப்பது போன்று இருக்கும் விஜய் சேதுபதியின் புகைப்படம் இடம் பெற்றுள்ளது.

Vijay Sethupathi Uppena Movie 3rd Look Poster With Smoking Create new issue

இதையும் படிங்க: ஆபாசத்தின் உச்சம்.... சட்டையை மட்டும் அணிந்து கொண்டு படுகவர்ச்சி போஸ் கொடுத்த சீரியல் நடிகை....!

இதே படத்தின் செகண்ட் லுக் போஸ்டரின் போது விஜய் சேதுபதி புகைபிடிப்பது போன்ற புகைப்படம் இடம் பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. முன்னணி ஹீரோக்கள் தங்களது போஸ்டர்களில் தம்மடிப்பது போன்று போஸ் கொடுத்தால் பிரச்சனை வருவது நிச்சயம். 

Vijay Sethupathi Uppena Movie 3rd Look Poster With Smoking Create new issue

இதையும் படிங்க: “குட்டி பப்பு”வுக்கு பெயர் வச்சாச்சு... செல்ல மகளின் புகைப்படத்துடன் அறிவித்த ஆல்யா மானசா....!

இதே சிக்கல் தான் சர்கார் படத்தின் போது விஜய்க்கும் வந்தது. அதனால் படக்குழு வேற மாதிரி போஸ்டர் வெளியிட்டிருப்பார் என்று பார்த்தால் மீண்டும் தம்மடிப்பது போன்ற போஸ்டரையே வெளியிட்டு விஜய் சேதுபதியை சிக்கலில் சிக்க வைத்துள்ளனர். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios