தனது குளியல் படங்கள் குறித்து அட்வைஸ் செய்த ‘அண்ணா’ ஒருவருக்கு, ’மார்பகத்தை இதுக்கு மேல மறைச்சிக்கிட்டுக் குளிக்கிறது. பேசாம உங்க திருவாயை மூடிக்கிட்டுப்போங்க பிரதர்’ என்று கடுப்பாக கமெண்ட் அடித்திருக்கிறார் ஒரு மலையாள நடிகை.

நடிகைகள் சமூகவலை தளங்களில் தங்களது கவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துகிறார்கள். இது பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகிறது. மலையாள நடிகை திரிஷ்யா ரகுநாத். 'ஹாப்பி வெட்டிங்’, ’மேட்ச் பாக்ஸ போன்ற படங்களில் நடித்திருக்கிறார். 

சமீபத்தில் இவர் தனது உடலை இறுக்கப்பிடித்திருக்கும் ஈரமான உடையில் கவர்ச்சியான ஒரு படத்தை வெளியிட்டார். அதை பார்த்து ரசிகர் ஒருவர், ’உங்கள் இமேஜை நீங்களே ஏன் இப்படி கவர்ச்சி படத்தை வெளியிட்டு கெடுத்துக்கொள்கிறீர்கள்? ஒரு சகோதரனாக இதை சொல்கிறேன்’ என குறிப்பிட்டிருந்தார். 

அவரது சகோதர பாசத்தைத் தெளிவாகப் புரிந்துகொண்ட த்ரிஷ்யா ரகுநாத்,‘நான் எல்லாவற்றையும் மூடிக்கொண்டுதான் இருக்கிறேன். இன்னும் ஓப்பனாக சொல்லணும்ன்னா என்னுடைய மார்பகத்தை நான் மூடிக் கொண்டுதான் இருக்கிறேன். அதை நான் வெட்டி எறியமுடியாது. அது எல்லாம் உடலில் இயற்கையாக அமைந்தது. அதை ஒருபோதும் நான் வெளிக்காட்டவில்லை. முடிந்தவரை மூடிக்கொண்டுதான் இருக்கிறேன். தயவு செய்து புரிஞ்சிக்கோங்க.. நீங்கள் பார்க்கும் விதத்தை மாற்றிக்கொள்ளுங்கள்’ என கோபமாக பதில் அளித்தார். இப்பதிவுக்கு நடிகைக்கு ஆதரவாகவே கமெண்டுகள் வருகின்றன.