தெலுங்கு திரையுலகில் கொடி கட்டி பறந்த தமன்னா கேடி திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பின்னர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் தமன்னா நடித்த கல்லூரி திரைப்படம் அவருக்கும் பெரும் பெயரையும், புகழையும் பெற்றுத் தந்தது. தெலுங்கு, இந்தி சினிமாவில் ஒரு ரவுண்ட் வந்த தமன்னா. தமிழில் அஜித், விஜய் உட்பட முன்னணி ஹீரோக்கள் அனைவருடனும் ஜோடி போட்டுவிட்டார்.  

இதையும் படிங்க: நிறைமாத கர்ப்பிணியாக பாடகி சைந்தவி... முதன் முறையாக வெளியான க்யூட் போட்டோஸ்...!

அதேபோல் பவன் கல்யாண், மகேஷ்பாபு, அல்லு அர்ஜுன், நாகசைதன்யா, ஜூனியர் என்.டி.ஆர் எனப் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்துவிட்டார். பாகுபலி படத்தில் தமன்னா நடித்த அவந்திகா கேரக்டர் அவரது கேரியரையே மாற்றும் படமாக அமைந்தது. ஹோம்லி, கிளாமர் என இரண்டையும் கலந்து கட்டி என்ன தான் நவரசத்தையும் வெளிப்படுத்தினாலும் தமன்னாவிற்கு தற்போது பட வாய்ப்புகள் அமையவில்லை. 

இதையும் படிங்க: கறுப்பு நிற ட்ரான்ஸ்பிரண்ட் புடவையில் கண்கூசும் அளவிற்கு கவர்ச்சி... ரசிகர்களை ஏங்க வைத்த சாக்‌ஷி...!

கடந்த ஆண்டு மட்டும் தமன்னா நடிப்பில் உதயநிதியின் கண்ணே கலைமானே, பிரபுதேவாவின் தேவி 2, விஷாலின் ஆக்ஷன் மற்றும் பெட்ரோமாக்ஸ் என்கிற ஹாரர் படம் ஆகியவற்றில் நடித்திருந்தார். அதுமட்டுமின்றி இந்தி படம் ஒன்றிலும் நடித்து முடித்துள்ளார். பேட்ட பட வில்லன் நவாசுதீன் சித்திக் உடன் ஜோடி போட்டுள்ளார். கடந்த ஆண்டு நடித்த எந்த படமும் பெரிதாக கைகொடுக்காவிட்டாலும், வீடு தேடி வரும் தயாரிப்பாளர்களை ஓவராக சம்பளம் கேட்டு தலைதெறிக்க ஓட விடுகிறாராம் தமன்னா. 

இதையும் படிங்க: கணவருடன் சேர்ந்து சமந்தா பார்த்த காரியம்... பொறுப்பற்ற செயலால் பொங்கி எழுந்த ரசிகர்கள்...!

தற்போது தெலுங்கு பட தயாரிப்பாளர் ஒருவர் ரவி தேஜாவுக்கு ஜோடியாக நடிக்க கேட்டு, தமன்னாவை அணுகியுள்ளார். கதை எல்லாம் கேட்ட தமன்னா, தயாரிப்பாளரிடம் 3 கோடி ரூபாய் சம்பளம் வேண்டும் என்று கேட்டுள்ளார். அதை கேட்ட தயாரிப்பாளர் சம்பளத்தை கொஞ்சம் குறைத்துக் கொள்ள கேட்டாராம். ஆனால் முடியவே முடியாது என்று மறுத்த தமன்னா, ரவி தேஜா படத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம். இதைக் கேள்விப்பட்ட தெலுங்கு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.