சரியாக மார்புக்கு மேலே கழுத்துக்கு கீழே டாப்சி போட்டுள்ள அந்த டாட்டூவை தற்போது ரசிகர்கள் பார்வைக்காக சட்டை பட்டனை கழட்டி காண்பித்துள்ளார். 

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் டாப்ஸி. பெயருக்கு ஹீரோயினாக நடிக்காமல், ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்தியில் இவர் நடித்த நாம் ஷபானா, பிங்க், ஜுத்வா உள்ளிட்ட படங்கள் ஹிட்டானதைத் தொடர்ந்து, பாலிவுட்டில் கவனம் செலுத்தி வருகிறார். 

சமீபத்தில் டாப்சி நடித்த தப்பட் திரைப்படம் கொரோனா பிரச்சனையால் தியேட்டர்களை விட்டு தூக்கப்பட்டாலும், ஹசீனா தில்ருபா, ஷபாஷ் மீத்து என கைவசம் படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. அதனால் அம்மணி தமிழில் எவ்வளவு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கூப்பிட்டாலும் வர முடியாத அளவிற்கு செம்ம பிசியாக உள்ளார். 

இதையும் படிங்க: ஆபாசத்தின் உச்சம்.... சட்டையை மட்டும் அணிந்து கொண்டு படுகவர்ச்சி போஸ் கொடுத்த சீரியல் நடிகை....!

அமிதாப் பச்சனுடன் டாப்ஸி நடித்த பிங்க் திரைப்படம் தான் இந்திய மார்க்கெட்டில் அவருக்கு நல்ல இடத்தை பெற்றுத்தந்தது. அந்த படத்தில் தனது மினாலி என்ற கேரக்டரை பிரதிபலிக்கும் விதமாக சிறையில் சிறகடித்து பறக்கும் பறவை டாட்டூ ஒன்றை போட்டிருப்பார். 

View post on Instagram

இதையும் படிங்க: அமலா பால் அழகை வர்ணித்த “மாஸ்டர்” பிரபலம்... வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு...!

சரியாக மார்புக்கு மேலே கழுத்துக்கு கீழே டாப்சி போட்டுள்ள அந்த டாட்டூவை தற்போது ரசிகர்கள் பார்வைக்காக சட்டை பட்டனை கழட்டி காண்பித்துள்ளார். தற்போது ஊரடங்கு காரணமாக அனைவரும் வீட்டிற்குள் முடங்கியுள்ள நிலையில், இந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ள டாப்ஸி, அதற்கான காரணத்தையும் விளக்கியுள்ளார்.