நயன்தாரா பாணியில் தியேட்டருக்கு சர்ப்ரைஸ் விசிட்... மதுரை மக்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்த சுனைனா
நடிகை சுனைனா, இயக்குனர் டோமின் டி சில்வா, திரைப்படத்தின் தயாரிப்பாளர் சதீஷ் நாயர் ஆகியோர் மதுரையில் ரசிகர்களுடன் அமர்ந்து ரெஜினா படத்தை பார்த்து ரசித்தனர்.
மதுரை சினிப்பிரியா திரையரங்கில் நடிகை சுனைனா நடிப்பில் வெளியாகிய ரெஜினா படத்தினை நடிகை சுனைனா, இயக்குனர் டோமின் டி சில்வா, திரைப்படத்தின் தயாரிப்பாளர் சதீஷ் நாயர் ஆகியோர் ரசிகர்களுடன் அமர்ந்து படத்தை பார்த்து ரசித்தனர்.
செய்தியாளர்களை சந்தித்த சுனைனா பேசும்போது: எனது முந்தைய படங்களுக்கும் தற்பொழுது வெளியாகி உள்ள இந்த ரெஜினா படத்திற்கும் மிகப்பெரிய அளவில் வித்தியாசம் இருக்கின்றனர். தற்பொழுது தமிழ் சினிமா துறையில் கதாநாயகிகள் சார்ந்த கதைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருவது ஆரோக்கியமான ஒரு விஷயமாக இருக்கிறது.
சினிமாவில் தற்போது கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து கதை கதாநாயகர்களுக்கும் கதாநாயகிகளுக்கான படம் ஆகவும் கமர்சியல் சினிமா ஆகவும் வந்து கொண்டு இருக்கிறது. இது நல்ல விஷயம் கலை எந்த வடிவத்தில் இருந்தாலும் அது நன்றாக இருந்தால் மக்கள் அதனை வரவேற்பார்கள்.
இதையும் படியுங்கள்... அஜித் பாணியில் காதல் திருமணம் செய்துகொண்ட வேதாளம் பட வில்லன் - வாழ்த்து மழை பொழியும் ரசிகர்கள்
ரெஜினா படம் பெண்களுக்கான படம் மட்டுமில்லை அனைத்து தரப்பு ரசிகர்களுக்குமான படம் அனைவரும் சென்று பார்த்தால் கண்டிப்பாக இந்த படம் அவர்களுக்கு திருப்தி அளிக்க கூடியதாக இருக்கும். நான் தியேட்டரிலும் படம் பார்பேன், வீட்டில் அமர்ந்து ஓ.டி.டியிலும் பார்ப்பேன், ஆனால் தியேட்டரில் சினிமா பார்க்கும் அனுபவம் எப்போதும் தனிதான்.
இயக்குநர் டோமின் டி சில்வா பேசும்போது நிறைய கதைகள் என்னிடம் இருக்கு ஆனால் சுனைனாதான் அதற்கான கால் சீட் கொடுக்கவில்லை என்றார். தொடர்ந்து திரையரங்குக்குள் சென்று அமர்ந்து ரசிகருடன் திரைப்படத்தை பார்த்து ரசித்து ரசிகளிடம் கருத்துக்களையும் கேட்டு அறிந்தனர். ரசிகர்கள் நடிகை சுனைனாவுடன் புகைப்படத்தை எடுத்துக் கொண்டனர்.
இதையும் படியுங்கள்... ரியாலிட்டி ஷோ மூலம் தொடங்கிய ஐஸ்வர்யா - உமாபதி காதல்... திருமணம் எப்போது? - தம்பி ராமையா தந்த சூப்பர் அப்டேட்