Breaking: நடிகை ஸ்ரீப்ரியாவின் தாயார் காலமானார்..!
பிரபல நடிகை ஸ்ரீபிரியாவின் தாயாரும், பிரபல பரதநாட்டிய கலைஞருமான கிரிஜா பக்கிரி சாமி வயது மூப்பு காரணமாக இன்று உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் 'முருகன் காட்டிய வழி' என்கிற படத்தின் மூலம் 1974 ஆம் ஆண்டு, திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ஸ்ரீபிரியா. தமிழில் மட்டும் சுமார் 200 படங்களில் நடித்துள்ள இவர், 90களில் ரஜினி, கமல், போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்துள்ளார். மேலும் கமலும், ரஜினியும், இணைந்து நடித்துள்ள 'அவள் அப்படித்தான்' போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
தமிழைத் தாண்டி மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ள ஸ்ரீப்ரியா... நடிப்பை தாண்டி இயக்குனர், தயாரிப்பாளர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட், என பன்முக கலைஞராகவும், நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சியிலும் முக்கிய பொறுப்பை வகித்து வருகிறார்.
இந்நிலையில் இவரின் தாயாரான கிரிஜா பக்கிரி சாமி, தன்னுடைய 81 வது வயதில் வயது மூப்பு காரணமாக உயிரிழந்த உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புகழ்பெற்ற பரதநாட்டிய கலைஞரான குரு காரைக்கால் நடேசன் பக்கிரிசாமி பிள்ளையின் மனைவி இவர் என்பது குறிப்பிடத்தக்கது. கிரிஜா பக்கிரிசாமி 'காதோடு தான் நான் பேசுவேன்' என்ற படத்தையும் இயக்கியுள்ளார். அதே போல் நீயா, நட்சத்திரம், போன்ற படங்களை மகளுடன் சேர்ந்து தயாரித்தும் உள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக வயது மூப்பு காரணமாக வரும் உடல்நல பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்த இவர் மயிலாப்பூரில் உள்ள தன்னுடைய வீட்டில் உயிரிழந்தார். இவருக்கு நடிகை ஸ்ரீபிரியாவை தவிர ஸ்ரீகாந்த் என்கிற மகன் ஒருவரும் உள்ளார். இவருடைய இறுதிச் சடங்குகள் நாளை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவருடைய மறைவுக்கு பலர் தங்களுடைய இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
- actress
- actress sripriya
- actress sripriya daughter
- actress sripriya family
- actress sripriya family photos
- actress sripriya hot
- actress sripriya husband
- actress sripriya interview
- actress sripriya open heart
- actress sripriya songs
- actress sripriya speech
- agnisakshi serial fame actress sree priya
- old actress sripriya hot
- sripriya
- sripriya actress family photos
- sripriya actress wiki
- sripriya family
- sripriya mother death
- sripriya movies
- telugu serial actress sree priya
- sri priya mother death
- sripriya mother girija pakkirisamy death
- Bharatanatyam dancer girija pakkirisamy death