'80ஸ் ரீயூனியன்' நிகழ்ச்சியில் 57 வயதில் நடனத்தில் பொளந்து கட்டிய ராதா..! அசர வைக்கும் ஆட்டத்தின் வைரல் வீடியோ

80களில் முன்னணி நடிகர், நடிகையாக இருந்த பிரபலங்கள் வருடத்திற்கு ஒருமுறை சந்தித்து, நட்பு பாராட்டிவரும் நிலையில், கொரோனா தாக்கத்தின் காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சமீபத்தில்  ரீ யூனியன் நிகழ்ச்சி நடந்தது. இதில்  நடிகை ராதா டான்ஸ் ஆடிய வீடியோ தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

Actress Radha dance in 80's reunion function


1980களில் திரையுலகில் முன்னணி நடிகர், நடிகைகளாக இருந்த தென்னிந்திய திரைபிரபலங்கள் மற்றும் பாலிவுட் பிரபலங்களின் ரீ-யூனியன்  நிகழ்ச்சி  மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு, கடந்த வாரம்  மும்பையில் நடந்தது. இதில் பிரபல பாலிவுட் நட்சத்திரங்களான பூனம் தில்லான் மற்றும் ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் நான்கு தென் மாநிலங்களைச் சேர்ந்த நடிகர்களுக்கு விருந்தளித்து உபசரித்தனர். 

ஒவ்வொரு ஆண்டும் இந்த ரீ யூனியன் நிகழ்ச்சியின் போது ஒரே நிறத்தின் உடை அணிந்து அந்த நாளை, குதூகலமாக கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ள நிலையில், இந்த ஆண்டு சில்வர் மற்றும் ஆரஞ்சு நிற உடையில் நடிகர் நடிகைகள் ஜொலித்தனர். இந்த நிகழ்ச்சிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட மகாராஷ்டிர மற்றும் உள்ளூர் ஸ்பெஷல் உணவு வகைகள் ஏற்பாடு செய்யப்பட்டு...நாள் முழுவதும் ஆட்டம் பாட்டம் என களைகட்டியது நிகழ்ச்சி.

Actress Radha dance in 80's reunion function

தைரியமாக உண்மையை சொன்ன ராமமூர்த்தி... சிக்கிய கோபி? சூடான ராதிகா... பரபரக்கும் பாக்கியலட்சுமி தொடர்!

விடிய விடிய நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில்,  விளையாட்டு மற்றும் வினாடி வினா உள்ளிட்டவைக்கு பூனம் தில்லான் ஏற்பாடு செய்திருந்தார். நட்பு, தோழமை, வேடிக்கை நிறைந்த மாலைப் பொழுதாக ரீயூனியன் அமைந்திருந்தது. பிரமாண்டமாக நடந்த இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் ராஜ்குமார், சரத்குமார், சிரஞ்சீவி, பாக்யராஜ், வெங்கடேஷ், அர்ஜுன், ஜாக்கி ஷெராஃப், அனில் கபூர், சன்னி தியோல், சஞ்சய் தத், நரேஷ், பானுச்சந்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Actress Radha dance in 80's reunion function

OTT Release This Week: இந்த வாரம் ஓடிடி ரிலீசுக்கு வரிசை கட்டிய சூப்பர் ஹிட் படங்கள்!

அதே போல் நடிகைகள் சுஹாசினி, குஷ்பூ, ரம்யா கிருஷ்ணன், லிஸ்ஸி, பூர்ணிமா, ராதா, அம்பிகா, சரிதா, சுமலதா, ஷோபனா, ரேவதி, மேனகா, பூனம் தில்லான், நதியா, ராதா, அம்பிகா பத்மினி கே, வித்யா பாலன், டினா அம்பானி, மீனாட்சி சேஷாத்திரி,  மது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் நடிகை ராதா தன்னுடைய 57 வயதிலும் நளினமான நடன அசைவுகளை வெளிப்படுத்தும் விதமாக டான்ஸ் ஆடிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios