OTT Release This Week: இந்த வாரம் ஓடிடி ரிலீசுக்கு வரிசை கட்டிய சூப்பர் ஹிட் படங்கள்!
திரையரங்குகளில் திரைப்படம் பார்க்க எப்படி ரசிகர்கள் வட்டாரம் இருக்கிறதோ அதேபோல் தற்போது ஓடிடி தளங்களில் வெளியாகும் திரைப்படங்களைப் பார்க்க அதிக ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் நவம்பர் 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் ஓடிடியில் வெளியாக உள்ள திரைப்படங்கள் என்னென்ன தெரியுமா?
சமீப காலமாக திரையரங்குகளில் புது படங்கள் எப்படி வெளியாகிறதோ, அதே போல் ஓடிடி தளங்களிலும் வாரம் தோறும் பல்வேறு படங்கள் வெளியாகி வருவதை பார்த்து வருகிறோம். இவற்றில் சில படங்கள் ஏற்கனவே திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்ற பின்னர், ஓடிடி தளங்களில் வெளியாகிறது. இன்னும் சில திரைப்படங்கள், ஓடிடி தளங்களில் நேரடியாக வெளியிடப்படுகின்றன. அந்த வகையில் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றிபெற்ற, 'சர்தார்', 'காட் ஃபாதர் போன்ற படங்கள் வெளியான நிலையில், இந்த வாரம் வெளியாக உள்ள திரைப்படங்கள் குறித்த தகவல் இதோ...
கேஜிஎப் படத்தின் வெற்றிக்கு பின்னர், இந்திய திரையுலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த கன்னட திரைப்படம் என்றால் அது 'காந்தாரா' படம் தான். சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, சுமார் 400 கோடி வசூல் சாதனை செய்தது. மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இந்த படத்தை பார்த்துவிட்டு வெகுவாக பாராட்டியது மட்டுமின்றி, இந்த படத்தின் ஹீரோவும், இயக்குனருமான, ரிஷப் செட்டியை அழைத்து அவருக்கு தங்க சங்கிலியையை பரிசாக வழங்கினார். இந்த திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நவம்பர் 24ஆம் தேதி வெளியாக உள்ளது.
இதை தொடர்ந்து, தமிழில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகி கலவையான விமர்சனங்களுக்கு மத்தியில், முதலுக்கு மோசம் இல்லாமல் வெற்றி பெற்ற திரைப்படம் 'பிரின்ஸ்'. காமெடியை மட்டுமே அடிப்படியாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில், நவம்பர் 25ஆம் தேதி வெளியாகிறது.
மேலும் நடிகர் நிவின் பாலி மற்றும் அதிதி பாலன் நடிப்பில், கடந்த அக்டோபர் 21 ஆம் தேதி வெளியான மலையாள படமான 'படவெட்டு' என்கிற திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இந்த வாரம் வெளியாக உள்ளது.
அதேபோல் துல்கர் சல்மான் மற்றும் பாலிவுட் நடிகர் சன்னி தியோல் நடிப்பில் சைக்காலஜி திரில்லராக கடந்த செப்டம்பர் மாதம்வெளியான திரைப்படம் 'சப்'. மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம், வரும் நவம்பர் 25ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.