நடிகை ஸ்ரீதிவ்யா:

தெலுங்கில், 'ஹனுமான் ஜங்க்ஷன் ' என்கிற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை ஸ்ரீதிவ்யா. இதை தொடர்ந்து ஒரு சில தெலுங்கு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.

நாயகி அவதாரம்:

இதை தொடர்ந்து தெலுங்கில், 'மனசார' என்கிற படத்தின் மூலம் கடந்த 2010 ஆம் ஆண்டு நாயகியாக மாறினார். இந்த படம் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை.

தமிழில் அறிமுகம்:

தெலுங்கு மொழியை தொடர்ந்து தமிழ் படங்களிலும் இவருக்கு வாய்ப்புகள் வந்தது. அந்த வகையில் கடந்த 2013 ஆம் ஆண்டு, இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்த, 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தில் நடித்தார்.

மேலும் செய்திகள்: பெப்சி தொழிலாளர்களுக்கு பெரும் தொகை கொடுத்து உதவிய உதவிய ஏ.ஜி.எஸ் நிறுவனம்!
 

இந்த படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. இதை தொடர்ந்து, அடுத்தடுத்து தமிழ் படங்களில் கமிட் ஆகி நடிக்க துவங்கினார்.

சரிவை சந்தித்த ஸ்ரீதிவ்யா:

ஆரம்பம் இவருக்கு அமோகமாக இருந்த போதிலும், இவர் கடந்த சில ஆண்டுகளாக நடித்த தமிழ் படங்கள் படு தோல்வியை தழுவியது . இதனால் இவருக்கு வந்த பட வாய்ப்புகளும் குறைய துவங்கியது. கடைசியாக இவர் நடிகர் ஜீவாவுடன் நடித்த 'சங்கிலி புங்கிலி கதவை தொர ' படம் தான் வெளியாகியது.

முயற்சி:

2017 ஆம் ஆண்டுக்கு பின், தொடர்ந்து மூன்று வருடங்களாக பட வாய்ப்பு இல்லாமல் இருந்த ஸ்ரீதிவ்யா தற்போது, ஒத்தைக்கு ஒத்தை மற்றும் விக்ரம் பிரபு நடிக்க உள்ள, ஒரு படத்திலும் நடித்து வருகிறார். 

கவர்ச்சிக்கு தயாரான ஸ்ரீதிவ்யா:

மேலும் செய்திகள்: கீர்த்தி சுரேஷுக்கு பாஜக-வை சேர்ந்த தொழிலதிபருடன் திருமணமா? உண்மையை போட்டுடைத்த குடும்பம்!
 

நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் களம் காண உள்ள ஸ்ரீதிவ்யா, குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடித்தது எல்லாம் போதும், இனி காஜல், தமன்னா அளவிற்கு கவர்ச்சியில் இறங்கி நடிக்க முடிவு செய்தாராம்.

நண்பர்கள் அட்வைஸ்:

இந்த கவர்ச்சிகரமான யோசனையை, தன்னுடைய நண்பர்களுடன் ஸ்ரீதிவ்யா பகிர்ந்து கொள்ள, அவருடைய நண்பர்கள், கவர்ச்சியாக நடிக்க அதற்கேற்ற உடல் வாகு வேண்டும். உனக்கு ஹோம்லி தான் பொருந்தும். அதுக்கெல்லாம் நீ செட் ஆக மாட்ட என கூறி அவரை ஆப் செய்துவிட்டார்களாம். 

மேலும் செய்திகள்: கொரோனாவிற்கு எதிராக பிரகாசித்த ஒளி! 9 மணிக்கு 9 நிமிடம் விளக்கேற்றிய பிரபலங்கள்! புகைப்பட தொகுப்பு!

குடும்ப குத்துவிளக்கு என எடுத்த பெயரையும் வீணாக்கி கொள்ள வேண்டாம் என... தன்னுடைய கவர்ச்சி யோசனையை மூட்டை கட்டி வைத்து விட்டு, தனக்கு பொருத்தமான படத்தில் மீண்டும் சைலண்டாக நடிக்கலாம் என முடிவு செய்துவிட்டாராம் நடிகை ஸ்ரீதிவ்யாவும்.