Asianet News TamilAsianet News Tamil

இறந்து 20 வருஷம் ஆச்சு.. ஆனா ரசிகர்கள் மனதில் இவங்க தான் குயின்... நடிகை சௌந்தர்யாவின் திருமண வீடியோ..

Soundarya Marriage Video : இறந்து 20 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும் தனது ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளார் சௌந்தர்யா. அவரின் வீடியோக்கள், போட்டோக்களை அவரின் ரசிகர்கள் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்

Actress Soundarya throwback marriage video goes viral on social media Rya
Author
First Published Jul 9, 2024, 2:29 PM IST | Last Updated Jul 10, 2024, 9:15 AM IST

90களில் தெலுங்கு, தமிழ், கன்னடம், ஹிந்தி, மலையாளம் என பல மொழிகளிலும் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் தான் சௌந்தர்யா. கர்நாடகாவை சேர்ந்த சௌந்தர்யா 1992-ம் ஆண்டு கந்தர்வா என்ற கன்னட படத்தின் மூலம் அறிமுகமானார். இதை தொடர்ந்து அவருக்கு கன்னடம், தெலுங்கில் பட வாய்ப்புகள் குவியத்தொடங்கியது. 

குறிப்பாக தெலுங்கு திரையுலகில் உச்ச நடிகையாக வலம் வந்தார் சௌந்தர்யா. திரையில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தார். தெலுங்கு ரசிகர்கள் சௌந்தர்யாவை கொண்டாடி தீர்த்தனர். சாவித்ரிக்கு பிறகு மிகவும் வெற்றிகரமான மற்றும் பிரபலமான நடிகையாக சௌந்தர்யா மாறினார். 

நடிகை ரம்பாவின் கணவர் ஏற்கனவே திருமணமானவரா? விவாகரத்து வரை சென்று மீண்டும் கணவருடன் சேர்ந்து எப்படி?

1993-ம் ஆண்டு வெளியான பொன்னுமனி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் எண்ட்ரி கொடுத்தார் சௌந்தர்யா. இஹ்டை தொடர்ந்து முத்து காளை, சேனாதிபதி, அருணாச்சலம், காதலா காதலா, படையப்பா, தவசி, சொக்கத்தங்கம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். 

ரஜினி, கமல், சிரஞ்சீவி, மோகன்லால், நாகார்ஜுனா, வெங்கடேஷ், அமிதாப் பச்சன் அப்போது உச்சத்தில் இருந்த முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்தார் சௌந்தர்யா. 1992 முதல் 2003 வரை தனது திரை வாழ்க்கையில் தென்ந்தியாவின் உச்ச நடிகையாக சௌந்தர்யா வலம் வந்தார். தனது சினிமா புகழ் மூலம் அரசியலில் புகழ்பெற்ற தலைவராக மாற நினைத்தார் சௌந்தர்யா.

2004-ம் ஆண்டு பாஜகவில் இணைந்த சௌந்தர்யா, பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் 2004 ஏப்ரல் 17-ம் தேதி தனது சகோதரர் அமர்நாத் உடன் செஸன்னா என்ற சிறிய விமானத்தில் பெங்களூருவில் இருந்து கரீம்நகருக்கு பயணித்தார். ஆனால் அந்த விமானம் விபத்துக்குள்ளானதில் சௌந்தர்யாவும் அவரின் சகோதரரும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்போது ஒட்டுமொத்த நாட்டையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது. 

2003-ம் ஆண்டு ஜி.எஸ். ரகு என்ற சாஃப்ட்வேர் என்ஜினியரை சௌந்தர்யா திருமணம் செய்து கொண்டார். புகழின் உச்சியில் இருந்த சௌந்தர்யா தனது 32 வயதிலேயே இந்த உலகை விட்டு மறைந்த சம்பவம் தற்போது வரை ஆறாத வடுவாக ரசிகர்களின் மனதில் இருக்கிறது. சௌந்தர்யா இறக்கும் போது அவர் 7 மாத கர்ப்பிணியாக இருந்தார் என்பதே மிகவும் வேதனையான விஷயம்..

Siddharth :"நான் சொன்னதை தப்பா புரிஞ்சுக்கிட்டாங்க " மன்னிப்பு கேட்ட சித்தார்த். முதலமைச்சருடன் என்ன பிரச்சனை?

சௌந்தர்யா இறந்து 20 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும் அவரின் ரசிகர்கள் அவரின் வீடியோக்கள், போட்டோக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது சௌந்தர்யா திருமணத்தின் த்ரோபேக் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios