உலகம் முழுவதும் நேற்று புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. வழக்கம் போல திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது புத்தாண்டை வெளிநாட்டில் சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர். அங்கு ஆகா, ஓஹோ என ஆட்டம் போட்ட புகைப்படங்களை பிரபலங்கள் தங்களது சோசியல் மீடியா பக்கங்களில் ஷேர் செய்து வருகின்றனர். அப்படி பிரபல இந்தி நடிகை சோனம் கபூர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள வீடியோ சோசியல் மீடியாவில் தீயாய் பரவி வருகிறது. 

இத்தாலியின் ரோம் நகரில் தனது கணவர் ஆனந்த் அஹுஜாவுடன் நியூ இயரை கொண்டாடியுள்ளார். புத்தாண்டு முதல் நாளில் இருந்தே கொண்டாட்ட மூடிற்கு வந்துவிட்ட சோனம் கபூர், கடந்த 2019ம் ஆண்டு தனக்கு சிறப்பான ஆண்டாக அமைத்ததாக புகழ்ந்து பதிவிட்டுள்ளார். சகோதரி ரேகா கபூர் உடன் சேர்ந்து 3 படங்களை தயாரித்தது, தனது கனவான பேஷன் துறையில் கால் பதித்தது, தனது ஆத்மார்த்தமான காதலனான ஆனந்த் அஹுஜாவை திருமணம் செய்து கொண்டது. கணவருடன் சேர்ந்து புதிதாக வீடு கட்டியது என தனக்கு கிடைத்த சிறப்பான அனுபவங்களை பட்டியலிட்டுள்ளார். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

This past decade has been the most brilliant. I’ve acted in some incredible movies where I’ve met some amazing people who’ve become lifelong friends. I’ve made three films with @rheakapoor and realised that sisters make the best partners and can break glass Ceilings together with our films and sartorial choices And taken our passion for fashion and started @wearerheson . I met my soulmate @anandahuja and got married to him and built a home together . But most of all this decade has taught me that life has many paths and the only path that one should take is the one paved with the right intentions. Thank you to my family and friends, thank you to films and fashion. You make me whole. May love lead your way! 🎥 @karanboolani

A post shared by Sonam K Ahuja (@sonamkapoor) on Dec 31, 2019 at 5:26am PST

தனது குடும்பம், நண்பர்கள், படங்கள், பேஷன் துறை அனைத்திற்கும் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் தனது ஆசை கணவர் ஆனந்த் அஹுஜாவுக்கு பட்டப்பகலில், வெட்ட வெளியில் லிப் லாக் கிஸ் கொடுத்து கிக்கேற்றியிருக்கிறார் சோனம் கபூர். சோனம் தனது இன்ஸ்டாம் கிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அந்த வீடியோவை இதுவரை 44 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்துள்ளனர்.