Asianet News TamilAsianet News Tamil

கடந்த 2 வருஷமாவே இப்படித்தான்... தனது கொடூரமான இருண்ட நாட்கள் குறித்து மனம் திறந்த பிரபல நடிகை...!

ஒரே இடத்தில் அடைபட்டது போல் ஓவராக பீல் செய்யும் சிட்டிசன்கள் அனைவரும் உணரும் படி சோனாலி பிந்த்ரே தனது கடந்த கால இருண்ட பக்கங்கள் குறித்து மனம் திறந்துள்ளார். 

Actress Sonali Bendre Has Been Quarantining For Last 2 Years
Author
Chennai, First Published Apr 28, 2020, 12:32 PM IST

“பம்பாய்” படத்தில் அந்த அரபிக்கடலோரம் பாடலுக்கு அசத்தலாக நடனமாடி தமிழ் ரசிகர்களை உள்ளத்தை கொள்ளையடித்தவர் இந்தி நடிகை சோனாலி பிந்த்ரே. அதன் பின்னர் தமிழில் “காதலர் தினம்”, “கண்ணோடு காண்பதெல்லாம்” ஆகிய படங்களில் நடித்தார். 2002ம் ஆண்டு தயாரிப்பாளரும், இயக்குநருமான கோல்டி பெல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகன் இருக்கிறார்.

Actress Sonali Bendre Has Been Quarantining For Last 2 Years

திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிப்பதை நிறுத்திக்கொண்ட சோனாலி பிந்த்ரே அவ்வப்போது இந்தி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வந்த நடன நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்றார். இடையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சோனாலி பிந்த்ரே நியூயார்க்கில் சிகிச்சை பெற்றார். ’மெட்டாஸ்டேட்டிக்’ என்ற புற்றுநோயால் போராடி வந்த சோனாலி பிந்த்ரே, கீமோ தெரபி எடுத்ததன் மூலமாக கண் பார்வை பாதிக்கப்படும் அளவிற்கு சிரமங்களை சந்தித்தார். 

Actress Sonali Bendre Has Been Quarantining For Last 2 Years

இதையும் படிங்க: பெரிய இடத்து மாப்பிள்ளையாகும் பிரபாஸ்?... மெகா ஸ்டார் குடும்பத்து பெண்ணை கைபிடிக்க போறாராம்...!

அந்த புற்றுநோய் பரவும் தன்மை கொண்டது என்பதால் பல வலி நிறைந்த அனுபவங்களுக்கு இடையிலும் அதனை மன தைரியத்துடன் போராடி வருகிறார். இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிற்குள் முடங்கியுள்ளார். ஒரே இடத்தில் அடைபட்டது போல் ஓவராக பீல் செய்யும் சிட்டிசன்கள் அனைவரும் உணரும் படி சோனாலி பிந்த்ரே தனது கடந்த கால இருண்ட பக்கங்கள் குறித்து மனம் திறந்துள்ளார். 

Actress Sonali Bendre Has Been Quarantining For Last 2 Years

இதையும் படிங்க: இந்துக்கள் என்ன இளிச்சவாய்களா?... ஜோதிகாவிற்கு சப்போர்ட் செய்த சீமானை வெளுத்து வாங்கிய விஜயலட்சுமி...!

“நான் நலமாக இருக்கிறேன். எனக்கு இந்த ஊரடங்கு பெரிய சித்ரவதையாக இல்லை. ஏனென்றால் கடந்த இரண்டு வருடமாகவே நான் தனிமையில் தான் இருக்கிறேன். அதனால் எனக்கு பெரிதாக தெரியவில்லை. ஆனால் என்னைக் காண வரும் நண்பர்கள், விருந்தினர்கள் பார்க்க முடியாமல் போனது தான் வருத்தமாக உள்ளது. குறிப்பாக எனது பெற்றோரை பார்க்க முடியாமல் தவிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios