நடிகை சிநேகாவிற்கு, சில மாதங்களுக்கு முன் குழந்தை பிறந்ததை அடுத்து, ஏக்க சக்கமாய் எடை கூடியுள்ளார் சிநேகா, இதனால் தற்போது தன்னுடைய உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் இதுகுறித்த வீடியோ ஒன்றை அவர், வெளியிட அது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

நடிகை சினேகா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்த நிலையில் அவருக்கு ஜனவரி மாதம், அழகிய பெண் குழந்தை பிறந்தது. இதனை நடிகரும், சினேகாவின் கணவருமான பிரசன்னா மிகவும் மகிழ்ச்சியோடு தை மகள் வந்தாள் என ட்விட்டரில் பதிவிட்டு தெரிவித்தார்.

ஏற்கனவே சினேகா - பிரசன்னா தம்பதிக்கு 4 வயதில் விஹான் என்கிற ஆண் குழந்தை இருக்கும் நிலையில், பெண் குழந்தை பிறந்துள்ளதால் இருவருமே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர்.

மேலும் செய்திகள்: மாளவிகா மோகனுக்கு அடித்த அடுத்த ஜாக்பாட்...? பொறாமையில் பொசுங்கும் இளம் நடிகைகள்!
 

இந்நிலையில் சமீபத்தில், சினேகா கர்ப்பமாக இருக்கும்போது எடுக்கப்பட்ட போட்டோ ஷூட் புகைப்படங்களை அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார்.

இதைதொடந்து தற்போது, முதல் முறையாக தன்னுடைய அழகிய மகளின் புகைப்படத்தை ரசிகர்களுக்கு மகளிர் தினத்தன்று முதல்  காட்டியுள்ளார். இந்த புகைப்படம் தீயாய் பரவி வருகிறது. சினேகாவின் குழந்தை பார்ப்பதற்கு அவரை போலவே இருக்கிறது என பல ரசிகர்கள் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்: விஜய் -அஜித் மத்தியில் வனிதா அடித்த கூத்து... காது கூசும் வார்த்தைகளால் கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்...!
 

இந்நிலையில் குழந்தையை பார்த்து கொள்வதில் சினேகா அதிக கவனம் செலுத்தியதால், உடல் பயிற்சிகள் மேற்கொள்ளாமல், இவருடைய எடை எக்கச்சக்கமாக ஏறியது. இதனால், தற்போது தன்னுடைய உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். கடினமாக உடல் பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை இவர் வெளியிட, அது வைரலாக பரவி வருகிறது.

சிவகார்த்திகேயன் நடிப்பில், மோகன் ராஜா இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற வேலைக்காரன் படத்திற்காக சினேகா அதிகப்படியான உடற்பயிற்சிகளை செய்து, உடல் எடையை குறைத்து நடித்த போதும், அவருடைய நடிப்பின் பகுதி அதிகம் வெளியாவில்லை என்றும், குழந்தை பிறந்த பின், உடல் எடையை குறைப்பது எவ்வளவு கடினம் என்பதையும் கூறியிருந்தார் சினேகா என்பது, குறிப்பிடத்தக்கது.