"எனக்கு 20, உனக்கு 18" திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. அதையடுத்து ரஜினியுடன் சிவாஜி, விஜய்யுடன் அழகிய தமிழ் மகன், விக்ரமுடன் கந்தசாமி என பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்து அசத்தினார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் முன்னணி ஹீரோக்களுடன் நடித்தவர் ஸ்ரேயா. இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர்.

அதன் பின்னர் படங்களில் நடிக்காமல் இருந்த ஸ்ரேயா மீண்டும், திரையில் அதகளம் செய்ய உள்ளார். தனுஷ், மஞ்சுவாரியார் நடிப்பில் வெளியான அசுரன் படம், தெலுங்கில் ரீமேக் செய்யப்பட உள்ளது. அப்படத்தில் மஞ்சுவாரியார் நடித்த கதாபாத்திரத்தில் ஸ்ரேயா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிட்ட தட்ட 10 வருடங்களாக, முன்னணி நடிகையாக நடித்து வந்த இவர், கடைசியாக நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக, AAA படத்தில் நடித்தார்.

இதையும் படிங்க: பட்டன் போடாமல் படுகவர்ச்சியாய் போஸ் கொடுத்த பிக்பாஸ் அபிராமி... மரண பங்கம் செய்யும் நெட்டிசன்கள்...!

ஏற்கனவே பட வாய்ப்புகள் இல்லாமல் கிடைத்த படங்களில் நடித்து வந்த ஸ்ரேயா, இந்த படம் தோல்வி அடைந்ததால், திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆக முடிவெடுத்தார்.அதன் படி, ரஷ்யாவை சேர்ந்த காதலர் ஆண்ட்ரு என்பவரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டு, பின்னர் திருமணம் குறித்து ரசிகர்களுக்கு அறிவித்தார். தற்போது தன்னுடைய கணவர் ஆண்ட்ருவுடன், ஸ்பெயினில் வசித்து வருகிறார் ஸ்ரேயா.

இதையும் படிங்க: கவர்ச்சியில் கரை கண்ட நயன்தாரா...தினுசு தினுசாய் ஹாட் போஸ் கொடுத்து அசத்திய கிளிக்ஸ்...!

அவ்வப்போது கணவர் உடன் ஜாலியாக இருக்கும் வீடியோக்களையும், போட்டோஸையும் வெளியிட்டு முரட்டு சிங்கிள்ஸை கடுப்பேற்றி வருகிறார். அப்படி சமீபத்தில் ஸ்ரேயா வெளியிட்ட வீடியோ ஒன்று சர்ச்சையை கிளப்பி வருகிறது. பார்சிலோனாவில் உள்ள நடுரோட்டில் கணவர் உடன் சேர்ந்து நடனமாடியுள்ளார். "நீ வரும்போது நான் மறைவேனா" என்ற பாடலுக்கு ஸ்ரேயா ஆடியுள்ள நடனம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அத்துடன் இந்த பாடலுக்கு நடனம் அமைத்த பிருந்தா மாஸ்டருக்கு நன்றி தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: கண்ணீர் விட்ட சரத்குமார்... மெகா ஸ்டார் செய்த மறக்க முடியாத உதவியால் உருக்கம்...!

தற்போது பார்சிலோனாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சமயத்தில் மாஸ்க், கிளவுஸ் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் எதுவும் இல்லாமல் ஸ்ரேயா நடனமாடியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஒருவேலை இந்த வீடியோவை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் பார்த்தால் நடிகை ஸ்ரேயா மீது வழக்குப்பதிவு செய்யவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.