இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மூன்றாவது கட்டமாக மே 17ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் திரைப்பிரபலங்கள் அனைவரும் வீட்டிற்குள் முடங்கியுள்ளனர். வீட்டிற்குள் இருந்தாலும் ஆன்லைன் மூலமாக ஒருவர் மற்றொருவருடன் உரையாடி வருகின்றனர். அப்படி தெலுங்கு ஊடகம் ஒன்றிற்கு சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் அளித்த பேட்டி வைரலாகி வருகிறது. 

இதையும் படிங்க:  கவர்ச்சியில் கரை கண்ட நயன்தாரா...தினுசு தினுசாய் ஹாட் போஸ் கொடுத்து அசத்திய கிளிக்ஸ்...!

ஆன்லைன் பேட்டியில் பேசிய சரத்குமாரிடம் தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டாரான சிரஞ்சீவி குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அப்போது நான் பண பிரச்சனையில் இருந்தேன். தயாரிப்பாளர் ஒருவர் சிரஞ்சீவியிடம் தேதி வாங்கி கொடுங்கள். அவரை வைத்து படம் எடுத்து அதிலிருந்து வரும் லாபத்தை உங்களுக்கு கொடுக்கிறேன் என்றார். உடனடியாக சிரஞ்சீவியை சந்திக்க கிளம்பினேன். 

இதையும் படிங்க: பட்டன் போடாமல் படுகவர்ச்சியாய் போஸ் கொடுத்த பிக்பாஸ் அபிராமி... மரண பங்கம் செய்யும் நெட்டிசன்கள்...!

ஐதராபாத்தில் ஷூட்டிங்கில் இருந்த சிரஞ்சீவியிடம் தனிமையில் பேச வேண்டும் என்று கூறினான். உடனடியாக வீட்டிற்கு அழைத்துச் சென்று சாப்பிட வைத்தார். பின்னர் என்ன பிரச்சனை என்று கேட்டார். கைவசம் இருக்கும் படங்களை முடித்த பிறகு தேதி தருவதாக உறுதியளித்தார். சம்பளம் பற்றி கேட்டதற்கு உனக்கு பிரச்சனை என்று சொன்னாயே. எனக்கு எதுவும் வேண்டாம் உங்கள் பிரச்சனையை முதலில் தீர்த்துக் கொள்ளுங்கள் என்று கூறினார். அதுவும் மிகவும் நெகிழ்ச்சியான தருணம் என்று கூறிய சரத்குமார் கண் கலங்க உருக்கமாக பேசினார்.