லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துவிட்டார்.  கைதி, மாநகரம் போன்ற வித்தியாசமான படங்களை இயக்கி, சூப்பர்  ஹிட் கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உடன் விஜய் கூட்டணி அமைத்துள்ளதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப்படத்தில் ஹீரோயினாக மாளவிகா மோகனனும், வில்லனாக 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் அனிருத் இசையில் பாடல்கள் அனைத்தும் சோசியல் மீடியாவில் பட்டையைக் கிளப்பி வருகிறது. 

இதையும் படிங்க: ரணகளத்திலும் கிளுகிளுப்பு... அடல்ட் பட டீசரை வெளியிட்ட சர்ச்சை இயக்குநர்...!

குறிப்பாக மாஸ்டர் படத்தில் இடம் பெற்றுள்ள வாத்தி கம்மிங் பாடல் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்துள்ளது. அதனால் இந்த பாடலுக்கு டிக்-டாக்கில் பலரும் விதவிதமான வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் மாஸ்டர் படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்களின் டிக்-டாக் வீடியோ 1.5 பில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. 

இதையும் படிங்க: ஒட்டு துணி கூட இல்லாமல் உச்ச கட்ட ஆபாசம்... பலான காட்சிகளுக்கு பஞ்சமே இல்லாத சர்ச்சை இயக்குநரின் படம்...!

தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் திரைப்பிரபலங்கள் பலரும் டிக்-டாக்கில் முகாமிட்டுள்ளனர். போதாக்குறைக்கு சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை பிரபலமான நட்சத்திரங்கள் பலரும் வாத்தி கம்மிங் பாடலுக்கு டிக்-டாக் வீடியோக்களை வெளியிட்டு, லைக்குகளை குவித்து வருகின்றனர். மாஸ்டர் ஆடியோ ரிலீஸ் விழாவில் வாத்தி கம்மிங் பாடலுக்கு விஜய் ஒரு ஸ்டெப் போட்டார். 

இதையும் படிங்க: சரிந்து விழும் தாவணியை சரி செய்யாத பைங்கிளி...சகல அழகையும் ஒருசேர காட்டி அதிர்ச்சி கொடுத்த சாக்‌ஷி...!

@theshilpashetty

This is for you ##thalapathyvijay . Love this song! . 💃 ##Tamil ##tiktoktamil ##dance ##love ##tamilsong ##duetwithshilpa ##dancewithme

♬ Vaathi Coming (From "Master") - Anirudh Ravichander & Gana Balachandar

சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலான அந்த ஸ்டெப்பை அப்படியே காப்பியடித்து, ஷில்பா ஷெட்டி டிக்-டாக் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். கடந்த மாத இறுதியில் வெளியிடப்பட்ட அந்த வீடியோ இதுவரை 19.7 மில்லியன் பார்வையாளர்களை பெற்று டிக்-டாக் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது. அதேபோல் 1.9 மில்லியன் லைக்குகளை குவித்துள்ளது. இதற்கு முன்னதாக புட்ட பொம்மா பாடலுக்கு செய்த டிக்-டாக்கை விட தளபதியின் பாடலுக்கு ஷில்பா ஷெட்டி போட்ட ஆட்டம் தான் லைக்குகளை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.