கடந்த சில வாரங்களாகவே சுயவிளம்பர வெறி கொண்டு அலையும் துணை நடிகை ஷாலு சம்மு, தன்னை ஒருவர் ஒரு லட்ச ரூபாய் கொடுக்கிறேன். என்னுடன் டேட்டிங்குக்கு வருகிறாயா? என்று கேட்டதாக நேற்று மீண்டும் பரபரப்பு கிளப்பியிருக்கிறார்.

ஷாலு சம்மு சமீபகாலமாக தோழி கேரக்டர்களுக்கு முதல் சாய்ஸ். நயன்தாரா தொடங்கி திவ்யா வரை பல நடிகைகளுக்கு தோழியாக படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் ஹிட் அடித்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ இவரை இன்னும் பிரபலப்படுத்தியது. அதே சமயம் சமீபத்திய பார்ட்டி ஒன்றில் மிக ஆபாசமாக நெருக்கமாக ஒரு ஆண் நண்பருடன் ஆடிய இவரது வீடியோ ஒன்று வலைதளங்களில் வைரலானது. அந்த வீடியோவை தொடர்ந்துதனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து மேலும் மேலும் ஷாலு சூடேற்றியது தனிக்கதை.


இந்நிலையில் இரு வாரங்களுக்கு முன்பு,  விஜய் தேவரகொண்டா படத்தில் நடிக்க வேண்டும் என்றால் படுக்கையை பகிர வேண்டும் என்று பிரபல இயக்குனர் கூறியதாக பகீர் குற்றச்சாட்டு ஒன்றை ஷாலு சம்மு தெரிவித்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்த போது ரசிகர் ஒருவர் ‘நீங்கள் மீடூவால் பாதிக்கபட்டுள்ளீர்களா என்று கேள்வி கேட்டிருந்தார்’ அதற்கு பதில் கூறிய ஷாலு ஷம்மு ‘விஜய் தேவர்கொண்டா படத்தில் நடிக்க பிரபல இயக்குனர் ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாகவும், ஆனால் அப்போது அதனை தான் வெளியில் சொல்லவில்லை ‘ என்று கூறி பரபரப்பை உண்டாக்கியிருந்தார்.

அந்த விளம்பரம் தனக்குப் போதவில்லை என்று நினைத்தாரோ என்னவோ நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் ‘ஒரு லட்ச ரூபாய் தருகிறேன். என்னுடன் டேட்டிங் வருகிறாயா என்று கேட்ட அப்பாவி நபரின் ஸ்கிரீன் ஷாட்டை தனது பக்கத்தில் பகிர்ந்து மானத்தை வாங்கிக்கொண்டிருக்கிறார் ஷம்மு.