பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானுக்கும், அவரது முதல் மனைவி அம்ரித சிங்கிற்கும் பிறந்தவர் சாரா அலி கான். கடந்த வருடம் 2018 ஆம் ஆண்டு, 'கிதர்னாத்' என்கிற படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருது.  உள்ளிட்ட ஒருசில விருதுகளைப் பெற்றார். இந்தியில் இளம் நடிகையாக வலம் வரும் இவர், சர்ச்சைகளுக்கும் பெயர் போனவர். 

இதையும் படிங்க: அரைகுறை உடையில்... நடுரோட்டில் நின்று முத்தம்... அமலா பாலின் அடுத்த அட்ராசிட்டி...!

இந்தியில் பிரபல நடிகரின் மகள் என்ற எண்ணம் கொஞ்சம் கூட இல்லாமல், கண்கள் கூசும் அளவிற்கு கவர்ச்சி உடையில் ஹாட் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் கூட பிகினி உடையில் தம்பியுடன் பிறந்தநாள் கொண்டாடிய சாரா அலிகானை நெட்டிசன்கள் வெளுத்து வாங்கினர். சாரா வெளியிடும் படுகவர்ச்சி புகைப்படங்களும் சர்ச்சையில் சிக்குவது உண்டு. 

இதையும் படிங்க: டிரான்ஸ்பரன்ட் புடவையில்...முன்னழகு மொத்தத்தையும் விருந்தாக்கிய சாக்‌ஷி அகர்வால்...வைரலாகும் ஹாட் போட்டோஸ்...!

தற்போது ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ், அக்‌ஷய்குமார், சாரா அலிகான் நடித்து வரும் அட்ரங்கி ரே படத்தின் ஷூட்டிங் வாரணாசியில் நடைபெற்று வருகிறது. அங்கு சென்ற சாரா அலிகான், அம்மா அம்ரிதா சிங்குடன் சேர்ந்து காசி விஸ்வநாதர் கோவிலில் தீப வழிபாடு நடத்தியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்தியாவில் சில இந்து கோவில்களில் பிற மதத்தினர் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. 

சாரா அலிகான் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்திய புகைப்படங்களையும், நெற்றில் மஞ்சள், குங்குமத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இஸ்லாமிய பெண்ணான சாரா அலிகானின் இந்த நடவடிக்கை இந்து அமைப்புகளை மட்டுமல்லாது, இஸ்லாமியர்களையும் கடுப்பாக்கியுள்ளதாம்.

 

இதையும் படிங்க: அஜித், சிம்புவை தொடர்ந்து ஜோதிகாவிற்கும் சிக்கல்... விடாமல் துரத்தும் கொரோனா வைரஸ்...!

மேலும் முஸ்லீம் பெண்ணான சாரா அலிகான் காசி விஸ்வநாதரை வழிபட்டது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. தற்போது தனுஷ் படத்தின் ஷூட்டிங் வாரணாசியில் நடைபெற்று வரும் நிலையில், இந்து அமைப்புகள் சாரா அலிகானின் செயலைக் கண்டித்து போராட்டத்தில் இறங்கினால் ஷூட்டிங் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் என்ன செய்வதேன்று தெரியாமல் படக்குழுவினர் தவித்து வருகின்றனர்.