பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ராஜா ராணி என்ற சீரியல் மூலம் பிரபலமானவர் ஆல்யா மானசா.  அந்த சீரியலில் செண்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்த ஆல்யா அனைவரது மனைதையும் ஈசியாக கொள்ளையடித்தார். குளிர் 100 படத்தில் ஹீரோவாக நடித்தவர் சஞ்சீவ்.
இவர் தான் ராஜா, ராணி தொடரில் ஹீரோவாக நடித்து வந்தார். சீரியலில் சின்னய்யா...சின்னய்யா... என்று கொஞ்சிய ஆல்யா ரசிகர்கள் மனதை மட்டுமல்ல சஞ்சீவையும் கவர்ந்தார். 

இதையும் படிங்க: சித்தார்த்தை ஏன் பிரிந்தேன்... முதல் முறையாக மனம் திறந்த சமந்தா...!

தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் ஆல்யா மானசா அவ்வப்போது தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். இதனால் சின்னத்திரையில் ஆல்யாவை பார்க்க முடியவில்லையே என்ற ரசிகர்களின் ஏக்கம் சற்றே தீர்ந்து போகிறது. இந்நிலையில் கர்ப்பிணி மனைவியான ஆல்யாவிற்காக சஞ்சீவ் ஸ்பெஷல் கிப்ட் ஒன்றை கொடுத்து அசத்தியுள்ளார். அப்படி என்ன கிப்ட் என்றால், காஸ்ட்லியான பென்ஸ் காரை ஒன்றை பரிசாக வாங்கி கொடுத்துள்ளார். 

இதையும் படிங்க: “பிகில்” பாண்டியம்மாளின் அடுத்த அதிரடி... மார்டன் டிரஸ் காற்றில் பறக்க கொடுத்த அசத்தல் போஸ்...!

அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள ஆல்யா மானசா, எனக்கு மிகவும் உற்சாகமாக உள்ளது. வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு அடியெடுத்து வைத்துள்ளோம், உங்களது ஆசீர்வாதம் எங்களுக்கு வேண்டும். லவ் யூ பப்புக்குட்டி சஞ்சீவ் கார்த்திக் என்று மகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். கார் வாங்குனதும் கணவன், மனைவி அடிக்கிற லூட்டிய பாருங்க...