இரண்டு வாரங்களுக்கும் மேலாக சோசியல் மீடியாவில் தாறுமாறாக விவாதிக்கப்படும் விஷயம் தர்ஷன், சனம் ஷெட்டி பஞ்சாயத்து தான்.என்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லி, ஏமாந்திட்டாருன்னு சனம் போலீசில் புகார் கொடுக்க. தர்ஷனோ முன்னாள் காதலனுடன் கூட தொடர்பில் இருக்கிறார் சனம், அதனால் அவரை கல்யாணம் பண்ணிக்கவே மாட்டேன் என்று பகீர் குற்றச்சாட்டை முன்வைத்தார். இன்று வரை ஒருவர் மீது ஒருவர் மாறி, மாறி குற்றச்சாட்டி வருகின்றனர். 

இதையும் படிங்க: கோடி, கோடியாய் கொடுத்தாலும் அந்த மாதிரி நடிக்க மாட்டேன்... நடிகை பிரியா ஆனந்த் அதிரடி...!

இந்த பிரச்சனைக்கு காரணம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தர்ஷனுடன் மிகவும் குளோஸாக இருந்த நடிகை ஷெரின் என்று கூறப்படுகிறது. சில பிக்பாஸ் பிரபலங்கள் கூட சனம் ஷெட்டிக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். ஆனால் அதை எதையும் தர்ஷன் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. 

நாளுக்கு நாள் பகீர் ஆதாரங்களையும், புகைப்படங்களையும் வெளியிட்டு ஒருவர் மீது ஒருவர் சேற்றை வாரி இறைத்து வருகின்றனர்.அந்த வகையில் சனம் ஷெட்டி, தர்சனை போனில் தாறுமாறாக கிழிக்கும் ஆடியோ வெளியாகி, சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

இதையும் படிங்க: போதும்... இன்னும் 2 வருஷம் தான்... அதுக்கு மேல என்னால முடியாது... அதிரடி முடிவெடுத்த சமந்தா...!

அந்த ஆடியோவில், நீ எல்லாம் ஒரு ஆம்பளையாடா?... இப்படி பேசுற என்று சனம் ஷெட்டி கூற, அதற்கு தர்ஷன் என்ன ரெக்கார்டு பண்றீங்களா?... நீங்க என்கிட்ட சொல்லவே இல்லையா? பட வாய்ப்புக்காக நான் யார் கூட வேணும்னாலும் இருப்பேன்... ஆமா நான் உன்கிட்ட அனுமதி கேட்டேன், நீ வேண்டாம்ன்னு சொன்ன அதுக்கு இப்போ என்ன என சனம் ஷெட்டி பதிலளிக்கிறார். இந்த ஆடியோவில் பேசி இருப்பது உண்மையான சனம் ஷெட்டி, தர்ஷன் தானா என்று தெரியாமலேயே சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.