தன்னுடைய காதலருக்கு மற்ற சில பெண்களுடன் கள்ளத்தொடர்பு இருப்பதை அறிந்த நடிகை சானா கான், அவருடனான காதலை முறித்து கொண்டு அதனை வெளிப்படையாக கூறி அதிரவைத்துள்ளார். 

தன்னுடைய காதலருக்கு மற்ற சில பெண்களுடன் கள்ளத்தொடர்பு இருப்பதை அறிந்த நடிகை சானா கான், அவருடனான காதலை முறித்து கொண்டு அதனை வெளிப்படையாக கூறி அதிரவைத்துள்ளார்.

நடிகர் சிம்பு கடந்த 2008 ஆம் ஆண்டு நடித்த, சிலம்பாட்டம் படத்தில்... இளம் வயது சிம்புவுக்கு ஜோடியாக நடித்திருந்தவர் சானா கான். இந்த படத்தை தொடர்ந்து பயணம், தம்பிக்கு இந்த ஊரு, அயோக்கியா உள்ளிட்ட சில படங்களில் மட்டுமே நடித்தார்.

மேலும் ஹிந்தி, தெலுங்கு, உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் மெர்வின் என்கிற நடன இயக்குனர் ஒருவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தார். அவ்வப்போது இவருடன், நடனமாடும் வீடியோக்களை வெளியிடுவதையும் வழக்கமாக வைத்திருந்தார்.

மேலும் செய்திகள் : படுக்கை அறை... பாடாய் படுத்தும் கவர்ச்சி உடை..! தங்கையை மிஞ்ச அக்கா சஞ்சனா செய்யும் அட்ராசிட்டி!

சானா கான்... மெர்வினை உண்மையாக காதலித்த போதும், மெர்வின் மற்றொரு நடிகையுடன் கள்ள உறவில் இருந்துள்ளார். இது குறித்து, பலமுறை சானா கானிடம் அவரது நண்பர்கள் சொல்லியும் அவர் அதனை நம்பவில்லையாம்.

ஒரு நிலையில் சானா கானுக்கு, மெர்வின் பற்றிய அணைத்து உண்மைகளும் தெரிய வந்தது. இது குறித்த ஆதாரங்களும் கிடைத்ததை தொடர்ந்து, கடின மனதுடன் அவருடன் இருந்து விலக முடிவு செய்தார். மெர்வினை பிரேக் அப் செய்து விட்டதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து, அதற்கான காரணத்தையும் விளக்கியுள்ளார். 

மேலும் செய்திகள் : அதிரடி காட்டிய வருமான வரித்துறை..! பீதியில் அன்பு செழியன் - அர்ச்சனா கல்பாத்தி!

சமீபத்தில் இவருக்கு உடல் நலம் சரி இல்லாமல் இருந்த போது கூட சற்றும் கண்டு கொல்லத்தாத காதலனால்... சானா கான் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானார் என்பது குறிப்பிடத்தக்கது.

View post on Instagram