கடந்த 5 ஆம் தேதி அன்று ஒரே நாளில், ஏ.ஜி.எஸ் சினிமாஸ்சுக்கு சொந்தமான 20 இடங்களிலும், அன்பு செழியன் வீடு, மற்றும் நடிகர் விஜய்யின் வீட்டில் அதிரடி ரெய்டு நடைபெற்றது. குறிப்பாக நடிகர் விஜய்யிடம் சம்மன் வழங்க ஐடி அதிகாரிகள் மின்னல் வேகத்தில் நெய்வேலியில் படப்பிடிப்பு நடந்து வரும் இடத்திற்கே சென்று சம்மன் வழங்கி, அவருடைய காரிலேயே அவரை அழைத்து சென்றது பரபரப்பில் உச்சம்.

மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த ரெய்டில், முக்கிய ஆவணங்கள் மற்றும் பல 77கோடி ரூபாய் பணம், 300 கோடி வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்கள் அன்பு செழியன் மதுரை வீடு மற்றும் சென்னை வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டது.

மேலும் செய்திகள்: ஐடி ரெய்டை மறைக்க விஜய் போட்ட மாஸ்டர் பிளான்!

அதே போல், விஜய் 5 ஆண்டுகள் வரி காட்டாமல் வரி ஏய்ப்பு செய்ததாகவும் கூறப்பட்டது. ஏ.ஜி.எஸ் நிறுவனத்திடம் இருந்தும் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது. இவை அனைத்தையும் தற்போது வரை ரகசியமாக வைத்திருக்கிறது வருமான வரித்துறை.

இந்நிலையில், விசாரணைக்கு இன்று நேரில் ஆஜர் ஆகும் படி வருமான வரி துறையினர் ஏ.ஜி.எஸ் சினிமாஸ் நிறுவனத்திற்கும், அன்பு செழியனுக்கும் சம்மன் கொடுத்திருந்தனர். எனவே இரு தரப்பினர் சார்பாகவும் முக்கிய நபர்கள் விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர்.

இதுகுறித்து வெளியாகியுள்ள தகவலின் படி, அர்ச்சனா கல்பாத்தி சார்பாக ஒரு நபரும், அன்பு செழியன் சார்பாக இருவரும் வருமான வரி துறையினர் விசாரணைக்கு சென்றுள்ளதாகவும், இவர்களிடம் அதிகாரிகள் அனல் பறக்க விசாரணை செய்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்: மாடர்ன் ட்ரெஸும் வேண்டாம்.. சுடிதாரும் தேவையில்லை.. இதுமட்டும் போதும்! பேரழகில் ரசிகர்களை கவரும் கயல் ஆனந்தி!

இதனால், அன்பு செழியன் மற்றும் அர்ச்சனா கல்பாத்தி என இரு தரப்பினரும் வயிற்றில் புளியை கரைத்த கதையாய்... பீதியில் உள்ளதாக கூறப்படுகிறது.