தளபதி விஜய் நெய்வேலியில் நடித்து வந்த 'மாஸ்டர்' பட ஷூட்டிங் ஸ்பாட்டிற்கே சென்ற, ஐடி அதிகாரிகள் அவருக்கு நேரடியாக சம்மன் கொடுத்தது மட்டும் இன்றி, விசாரணை செய்து அவருடைய காரிலேயே அழைத்து சென்றனர்.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள், சாலிகிராமத்தில் உள்ள விஜயின் வீட்டில் அவருடைய அப்பாவிடமும் ஐடி அதிகாரிகள் விசாரணை நடித்தனர். இதுகுறித்து வெளியாகியுள்ள தகவலின் படி, விஜய் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில், 'பிகில்' பட தயாரிப்பாளருக்கு சொந்தமான 20 இடங்களில், ரெய்டு நடந்து வருவதால், பிகில் படம் சம்மந்தமாக விஜய்யிடம் விசாரணை நடத்தி இருக்கலாம் என்றும் ஒரு தகவல் பரவி வருகிறது.

இது ஒரு புறம் இருக்க,  இந்த ஐடி சர்ச்சையை மறைக்க, 'மாஸ்ட்டர் கட்-அவுட் மற்றும் மாஸ்டர் ஃபர்ஸ்ட் சிங்கள் அப்டேட் என்கிற இரு ஹாஸ்டக் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

மாஸ்டர் படத்தின் அப்டேட் குறித்து திடீர் என பரவி வரும் இந்த தகவல்கள், ஐடி ரெய்டை மறைக்க, போடப்பட்ட மாஸ்டர் பிளான் என்றே சமூக வலைத்தளத்தில் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இது முழு பூசணிக்காவை ஒரு இலை சோற்றில் மறைக்கும் கதையாக இருக்கிறது...