பிரபல நடிகை ஒருவர், ஏற்கனவே தன்னுடைய பெற்றோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் அவருக்கு ரெம்டிசிவிர் மருந்து தேவை என தனது சமூக வலைதளம் மூலம் உதவி கேட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது அவரது பெற்றோர் கொரோனாவில் இருந்து குணமடைந்த நிலையில், நடிகை கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தாலும், ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே. ஜெயம் ரவி நடித்த 'கோமாளி' படத்தில் கதாநாயகிகளில் ஒருவராக நடித்த இவர், இதை தொடர்ந்து, ஜிவி பிரகாஷ் நடித்த 'வாட்ச்மேன்', 'பப்பி' உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்தார். 

இந்நிலையில், கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவு வரும் நிலையில், இவருடைய பெற்றோர் ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டுள்ளனர். இவர்களுக்கு, ரெம்டிசிவர் மருந்து தேவை என்றும், தனக்கு தெரிந்தவர்களிடம் மருந்தை கேட்டுள்ளதாகவும் அந்த மருந்தை கிடைக்க உதவி செய்யவும் என்றும் சமூக வலைத்தளத்தில் இவர் பதிவிட்ட பதிவு பரபரப்பை ஏற்படுத்தியது. 

பின்னர் சம்யுக்தவின் பெற்றோர் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டு, தீவிர சிகிச்சைக்கு பின் நலமடைந்து உள்ளனர். இவர்களை தொடர்ந்து, சம்யுக்தா ஹெக்டே கொரோனாவால் பாதிக்கப்பட்டு, மருத்துவர்களின் அறிவுரை படி மருந்துகள் எடுத்து கொண்டு தனிமையில் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் ரசிகர்கள் பலர் இவர் விரைவில் நலமடைய வேண்டும் என தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.