தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகத்தில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, கொரோனா பிரச்சனையின் காரணமாக போடப்பட்டுள்ள ஊரடங்கில், சமையல் மற்றும் வீட்டில் முட்டைகோஸ், மற்றும் கீரைகள் போன்றவற்றை வளர்த்து, அறுவடை செய்து வருகிறார். இது குறித்த புகைப்படங்களையும் அவ்வபோது, சமந்தா வெளியிட்டு வருவதும், இதற்கு அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருவதும் அனைவரும் அறிந்தது தான்.

 

இதையும் படிங்க: உடலோடு ஒட்டி உறவாடும் உடை... ஹன்சிகா அசத்தல் கவர்ச்சியை பார்த்து மெழுகாய் உருகும் ரசிகர்கள்...!

லாக்டவுன் நேரத்தில் படப்பிடிப்புகல் இல்லாததால் கணவர், குடும்பம், செல்ல நாய்குட்டி என ஜாலியாக பொழுதைக் கழித்து வருகிறார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா அவ்வப்போது தனது போட்டோஸையும் பகிர்ந்து வருகிறார். அப்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு சமந்தா, தனது நெருங்கிய தோழியும், பேஷன் டிசைனருமான ஷில்பா ரெட்டிக்கு கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தம் கொடுப்பது போன்ற போட்டோவை ஷேர் செய்திருந்தார். 

 

இதையும் படிங்க: பிரவசத்திற்கு பின் ராதிகா மகளிடம் ஏற்பட்ட அதிரடி மாற்றம்... கடைசி போட்டோவை பார்த்தால் நீங்களே அசந்துபோவீங்க!

அதனைத் தொடர்ந்து, ஷில்பாவிற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. என்னது சமந்தாவின் நெருங்கிய தோழிக்கு கொரோனாவா?. அப்போ சமந்தாவிற்கு என்ன ஆச்சோ, ஏதாச்சோ என ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்தனர். ஏனென்றால் ஷில்பாவிற்கு பரிசோதனை செய்யப்படுவதற்கு, சில நாட்களுக்கு முன்பு தான் சமந்தா அவரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார். அதுமட்டுமல்ல தோழியின் வீட்டிற்கு சென்ற சமந்தா செல்ல நாயுடனும் கொஞ்சி விளையாடினார். இதனால் சமந்தாவிற்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்குமா? என்ற கவலையில் ரசிகர்கள் ஆழ்ந்தனர். 

 

இதையும் படிங்க: “சிறுத்தை” படத்தில் நடித்த குட்டி பாப்பாவா இது?.... கண்ணுபடும் அளவிற்கு அழகில் ஜொலிக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ்!

அதனால் தான் நலமாக இருப்பதை ரசிகர்களுக்கு  தெரியப்படுத்துவதற்காக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தினமும் விதவிதமான போட்டோக்களை பதிவிட்டுள்ளார். இன்று தனது கணவருடன் யோகா செய்யும் போட்டோவை வெளியிட்டு, பயப்படாதீங்க நான் நல்லா தான் இருக்கேன் என சிம்பாளிக்காக ரசிகர்களுக்கு சிக்னல் கொடுத்துள்ளார்.