Asianet News TamilAsianet News Tamil

கர்ப்பமாக இருக்கிறாரா சமந்தா? திடீர் என வெளியேறியதாக வந்த தகவல்... ரசிகர்கள் ஷாக்!

நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார். திருமணத்திற்கு பின்பு,ம் தொடர்ந்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து, திருமணமான நடிகைகள் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு தருவதில்லை என கோலிவுட் திரையுலகில் நிலவி வந்த பேச்சுகளுக்கு முற்று புள்ளி வைத்தார்.
 

actress samantha pregnant confirmed? she leave the vijaysethupathi movie
Author
Chennai, First Published Mar 6, 2020, 10:09 AM IST

நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார். திருமணத்திற்கு பின்பு,ம் தொடர்ந்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து, திருமணமான நடிகைகள் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு தருவதில்லை என கோலிவுட் திரையுலகில் நிலவி வந்த பேச்சுகளுக்கு முற்று புள்ளி வைத்தார்.

முன்னணி நடிகையாக இருக்கும் போதே, பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் நடிப்பில் கடைசியாக தமிழில், விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற '96 ' படத்தின் தெலுங்கு ரீமேக் வெளியானது. ஆனால் இப்படம் தமிழில் வெற்றி பெற்ற அளவிற்கு தெலுங்கில் வெற்றிபெற வில்லை என்பது வருத்தம். 

actress samantha pregnant confirmed? she leave the vijaysethupathi movie

இந்த படத்தை தொடர்ந்து,  விக்னேஷ் சிவன் இயக்க உள்ள 'காத்து வாக்குல ரெண்டு கதால்' படத்தில் நடிக்க கமிட் ஆகி இருந்தார். இந்த படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க உள்ளார். மேலும் மற்றொரு நாயகியாக நயன்தாரா நடிக்கிறார்.

தற்போது நடிகை சமந்தா கர்ப்பமாக இருப்பதால், இவர்  கமிட் ஆகி இருந்த 'காத்து வாக்குல இரண்டு காதல்' படத்தில் இருந்து அவர் விலகி விட்டதாக தெலுங்கு  ஊடகங்கள் கிசுகிசுத்து வருகிறது.

actress samantha pregnant confirmed? she leave the vijaysethupathi movie

ஏற்கனவே, சமந்தா கர்ப்பமாக இருப்பதாக பல வதந்திகள் வந்து ஓய்திருப்பதால், இதுவும் அது போன்ற வதந்தியா? அல்லது உண்மையில் நடிகை சமந்தா கர்ப்பமாக இருக்கிறாரா என்பதை அவரே வெளிப்படையாக கூறும் வரை காத்திருக்கத்தான் வேண்டும். மேலும் திடீர் என சமந்தா நடிக்க இருந்த படத்தில் இருந்து விலகியதாக கூறப்படுத்திவது அவர்களுடைய ரசிகர்களுக்கு சிறு ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

Follow Us:
Download App:
  • android
  • ios