தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இடத்தில் இருப்பவர் நடிகர் அஜித்குமார். சோசியல் மீடியா பக்கங்களான ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என எதிலும் கணக்கு இல்லாவிட்டாலும் டாப் ட்ரெண்டிங்கில் மிரட்டுவதை தல அஜித்தை தவிர வேறு யாராலும் செய்ய முடியாது. எந்த பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கமாட்டார், அரசியல் விவகாரங்களுக்கு கருத்து சொல்லமாட்டார். ஆனால் அது என்ன மேஜிக்கோ தெரியவில்லை அஜித்தின் அத்தனை சங்கதிகளும் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகாமல் போவது இல்லை. 

வரும் மே 1ம் தேதி தல அஜித்தின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட அவரது ரசிகர்கள் திட்டமிட்டிருந்தனர். அதற்காக காமென் டி.பி. ஒன்றை வடிவமைத்திருந்த தல ஃபேன்ஸ் வெளியிட்டிருந்தனர். அந்த டி.பி. 5 மில்லியன் ட்விட்டுகளை கடந்து டுவிட்டர் ட்ரெண்டிங்கிலும் முதலிடம் பிடித்தது. இதனை தல ரசிகர்கள் தலைகால் புரியாத அளவிற்கு கொண்டாடி வந்த போது தான் குறுக்கே வந்து நிற்கிறார் நம்ம சமந்தா. 

இதையும் படிங்க: இந்துக்கள் என்ன இளிச்சவாய்களா?... ஜோதிகாவிற்கு சப்போர்ட் செய்த சீமானை வெளுத்து வாங்கிய விஜயலட்சுமி...!

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா இன்று தனது 33வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். திருமணத்திற்கு பிறகு பல நடிகைகள் திரையுலகில் தலை காட்டுவதே இல்லை. ஆனால் கல்யாணத்திற்கு பிறகும் ரசிகர்களிடமும் சரி, சினிமாவிலும் சரி சமந்தா மார்க்கெட் குறையவே இல்லை. தனது அசத்தல் நடிப்பால் இன்று வரை தனது ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருக்கிறார்.

இதையும் படிங்க: பெரிய இடத்து மாப்பிள்ளையாகும் பிரபாஸ்?... மெகா ஸ்டார் குடும்பத்து பெண்ணை கைபிடிக்க போறாராம்...!

கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ள சமந்தா, தனது பிறந்த நாளை காதல் கணவர் மற்றும் செல்ல நாய் குட்டியுடன் சிம்பிளாக கொண்டாடியிருக்கிறார். நாக சைதன்யா தனது கையால் செய்த கேக்கை நள்ளிரவில் சமந்தா வெட்டிய புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: அஜித் அப்பா, அம்மா இவங்க தான்... இதுவரை யாருமே பார்த்திடாத அசத்தல் போட்டோ...!

அதே சமயத்தில் சமந்தாவின் ரசிகர்கள் அவரது பிறந்தநாளை முன்னிட்டு உருவாக்கிய #HappyBirthdaySamantha என்ற ஹேஷ்டேக் இந்தியா அளவில் ட்ரெண்டாகி வருகிறது. அதுமட்டுமில்லாமல் எந்தவொரு தென்னிந்திய நடிகைகளுக்கும் கிடைக்காத வகையில் 2 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ட்வீட்களை பெற்று சாதனை படைத்துள்ளது.