பண்ணுனதெல்லாம் வீனா போச்சு! பேரிழப்பால்.. லைவில் கண்ணீர் விட்டு கதறிய நடிகை சதா! ஆறுதல் கூறிய ரசிகர்கள்.!
நடிகை சதா தன்னுடைய உணவகத்தை வேறு வழி இன்றி மூடப் போவதாக கூறி கண்ணீர் விட்டு அழுதுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிராவை சேர்ந்த நடிகை சதா 2002 ஆம் ஆண்டு ஜெயம் ரவி ஹீரோவாக அறிமுகமான 'ஜெயம்' படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அடியெடுத்து வைத்தவர். தெலுங்கில் ஜெயம் ரவி நடித்த கதாபாத்திரத்தில் நித்தின் நடித்திருந்த நிலையில், கதாநாயகியாக சதா தான் நடித்திருந்தார். மேலும் முதல் படத்திலேயே சிறந்த நடிகைக்கான ஃபிலிம் பேர் விருதையும் பெற்றார்.
'ஜெயம்' படத்தின் வெற்றியும், சதாவின் எதார்த்தமான அழகும், நடிப்பும் தமிழ் ரசிகர்களை அதிகம் கவர்ந்தது. எனவே அடுத்தடுத்து எதிரி, வர்ணஜாலம், அந்நியன், பிரியசகி, உன்னாலே உன்னாலே, திருப்பதி, போன்ற பல படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.
மே 5... ஓடிடி-யில் வெளியாகும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் பற்றிய முழு விவரம் இதோ..!
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், போன்ற மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார். அடுத்தடுத்து திரைப்படங்களில் பிசியாக நடித்து வந்த சதா, திடீர் என பட தயாரிப்பிலும் களமிறங்கினார். அந்த வங்கியில் கடந்த 2018 ஆம் ஆண்டு இவர், தயாரித்து நடித்திருந்த திரைப்படம் 'டார்ச் லைட்'. இதில் ஒரு பாலியல் தொழிலாளியாக நடித்திருந்தார். தன்னுடைய கணவனை காப்பாற்ற பாலியல் தொழிலாளியாக மாறும் ஒரு பெண், பின்பு ஏன் கணவரையே கொலை செய்ய துணிகிறாள் என்பதை பரபரப்பான காட்சிகளுடன் படமாக்கப்பட்டிருந்தது 'டார்ச் லைட்' திரைப்படம்.
படு தோல்வியை இப்படம் சந்தித்தது மட்டும் இன்றி, பாலியல் தொழிலாளியாக நடித்ததால் என்னவோ... அடுத்தடுத்து திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. சுமார் 30க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள சதா, தான் சம்பாதித்த பணத்தை மொத்ததையும் இன்வெர்ஸ் செய்து மும்பையில் ஹோட்டல் பிசினஸ் ஒன்றை துவங்கினார். எர்த்லிங்ஸ் கபே என்கிற பெயரில் சுமார் 4 வருடங்களுக்கு மேல் வெற்றிகரமாக இந்த ஓட்டல் இயங்கி வருகிறது. சதாவும் ஒரு நாளைக்கு சுமார் 12 மணிநேரம் இந்த கஃபே-வில் தான் நேரம் செலவழித்து, தன்னுடைய பிஸ்னஸின் வெற்றிக்கு பாடுபட்டு வந்தார்.
மெருகேறிய அழகில்... ஆளை மயக்கும் அதிதி ஷங்கர்! லேட்டஸ்ட் போட்டோஸ்
ஆனால் தற்போது திடீர் என, 'எர்த்லிங்ஸ் கபே' இயங்கி வரும் இடத்தின் உரிமையாளர்... அந்த இடத்தை காலி செய்ய சொல்வதாகவும், எவ்வளவோ இந்த சூழலை மாற்ற முயற்சித்த போதும் அது முடியாமல் போய் விட்டது என கண்ணீர் விட்டு அழுதுள்ளார். இவரின் பேச்சை கேட்டு ரசிகர்கள், நீங்க வேறு ஒரு இடத்தில் இந்த கடையை ஓப்பன் செய்தால் நாங்கள் அங்கும் வருவோம். உங்கள் கபே-வின் காபி-யை யாரும் மிஸ் செய்ய விரும்ப மாட்டார்கள் என கூறி வருகிறார்கள். எனினும் சதா என்ன முடிவெடுப்பார்? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
The Kerala Story Review: கேரளா ஸ்டோரி மதவெறியை தூண்டும் சர்ச்சை படமா? ட்விட்டர் விமர்சனம்!
உழைச்ச பணத்தையெல்லாம் கொட்டி... படத்தில் கூட நடிக்காமல் பிஸ்னஸை வளர்த்துட்டு திடீர்னு இப்படி ஒரு சோதனை வந்தா... யாருக்கு தான் மனசு வலிக்காது, டோன்ட் பீல் சதா... உண்மை, உழைப்பு, தரம் இருந்தால் நீங்க எங்க இந்த ஹோட்டலை திறந்தாலும் சூப்பராக வரவேற்பு கிடைக்கும்.