தமிழ் சினிமாவில் தற்போதைய இளசுகளின் கனவு கன்னிகள் லிஸ்டில் இடம்பிடித்துள்ளவர் அதிதி ஷங்கர்.
எதிர்பாராத விஷயம்:
எம்.பி.பி.எஸ் மருத்துவரான அதிதி ஷங்கர், திடீர் என கதாநாயகியாக மாறியது, யாருமே எதிர்பார்க்காத ஒரு சம்பவம் என்றே கூறலாம்.
நடிப்பில் ஆர்வம்:
தன்னுடைய அப்பா ஒரு இயக்குனர் என்பதாலோ... என்னவோ... அதிதிக்கு திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்பது கொள்ளை ஆசையாம்.
ஆசைக்கு மதிப்பு கொடுத்த குடும்பம்:
அதிதி ஷங்கர் நடிகையாக போகிறேன் என்று சொன்னது, அவரின் பெற்றோருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தினாலும், அவரின் ஆசைக்கு மதிப்பு கொடுத்து, அனுமதி கொடுத்தனர்.
வாய்ப்பு தேடிய அதிதி:
2 வருடம் பட வாய்ப்பு தேடலாம், கிடைத்தால் நடிக்கலாம்... இல்லை என்றால் மருத்துவராகலாம் என நினைத்த நிலையில் முதல் படமே, பெரிய நடிகருக்கு ஜோடியாக மாறினார்.
முதல் படமே ஹிட்:
இந்நிலையில் இவர் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்த, முதல் படமான விருமன் சூப்பர் ஹிட் வெற்றிபெற்ற நிலையில், அடுத்தடுத்த படங்களில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்தது.
குவியும் வாய்ப்புகள்:
தற்போது சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். ஆகாஷ் முரளிக்கு ஜோடியாக ஒரு படத்திலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.
ஆக்ட்டிவ் நாயகி:
எப்போதும் பரபரப்பாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கும் அதிதி ஷங்கர்... சமூக வலைதளத்தில் படு ஆக்ட்டிவாக இருப்பவர்.
போட்டோ ஷூட்:
இவர் கதாநாயகியாக மாறியது முதலே, அவ்வப்போது விதவிதமான போட்டோ ஷூட் நடத்தி... அதன் புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
லேட்டஸ்ட் போட்டோஸ்:
அந்த வகையில் ஆஷ் கலர்... லெஹங்கா அணிந்து... மெருகேறி அழகில் வெளியிட்டள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.