cinema

இலியானா அறிமுகம்:

தெலுங்கு படத்தின் மூலம் திரையுலகிற்குள் காலடி எடுத்து வைத்த இலியானா, தமிழில் கேடி படத்தின் மூலம் அறிமுகமானார்.

ரீச் கொடுத்த நண்பன்:

தமிழில் அதிகம் கவனம் செலுத்தாத இலியானாவுக்கு... ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ரீச் கொடுத்தது என்றால் அது விஜய்க்கு ஜோடியாக நடித்த நண்பன்.
 

கண்டீஷன் நாயகி:

முன்னணி நடிகை என்கிற இடத்தை அடைந்த பின்னர் ஓராயிரம் கண்டீஷன் போட்டதால், இவருக்கு தமிழில் மட்டும் அல்ல தெலுங்கு பட வாய்ப்புகளும் பறிபோனது.
 

காதல் தோல்வி:

கடந்த சில வருடங்களுக்கு முன்  புகைப்படக் கலைஞர் ஆண்ட்ரூ நீபோன்என்பவரை இலியானா காதலித்து வந்த நிலையில் அந்த காதல் பிரேக்அப்பில் முடிந்தது.
 

மனஉளைச்சல்:

இந்த தோல்வியால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான இலியானா, பல்வேறு மருந்து மாத்திரைகள் எடுத்து கொண்டதால் குண்டாக மாறினார்.

திரைப்படங்களில் கவனம்:

ஒருவழியாக காதல் தோல்வியில் இருந்து மீண்டு, மீண்டும் ஹிந்தி திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அடுத்தடுத்து சில படங்களிலும் நடித்து வருகிறார்.
 

கர்ப்பம் என ஷாக்:

இந்நிலையில் கடந்த ஓரிரு மாதத்திற்கு முன்னர், இலியானா தான் கர்ப்பமாக இருப்பாகாக தெரிவித்து, இது குறித்த சில புகைப்படங்களையும் வெளியிட்டார்.

திருமணத்திற்கு முன்பே:

குறிப்பாக இலியானா திருமணத்திற்கு முன்பே கற்பமானதால் ரசிகர்கள் உச்சகட்ட அதிர்ச்சியடைந்தனர். சில பட புரோமோஷனா? என்று கூட கேள்வி எழுப்பினர்.

நடிகையின் சகோதரருடன் டேட்டிங்:

 நடிகை கத்ரீனா கைஃப் சகோதரர் செபாஸ்டியன் லாரன்ட் மிச்செல் என்பவருடன் இலியானா டேட்டிங்கில் இருப்பதாக கூறப்பட்ட நிலையில் இதுவரை அவர் அதை உறுதி செய்யவிலை.
 

புகைப்படம்:

இந்நிலையில் இலியானா தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்ட்ரோரியில் தன்னுடைய பேபி பம்பை காட்டியபடி வீடியோ ஒன்றை வெளியிட அதன் புகைப்படங்கள் படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

ரகசியத்தை உடைப்பாரா?

குழந்தை பிறந்த பிறகாவது... கணவர் யார் என்கிற ரகசியத்தை இலியானா உடைப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

நைட் ட்ரெஸ்ஸிங்... 12 மணிக்கு 40-ஆவது பிறந்தநாளை கொண்டாடிய த்ரிஷா!

இந்தியாவில் தடை செய்யப்பட்ட படங்கள் இத்தனையா?... முழு லிஸ்ட் இதோ

திரிஷாவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா.. இவ்ளோநாள் இதுதெரியாம போச்சே!

ரொம்ப ஓவர்... பிகினியில் படு மோசமாக கவர்ச்சி காட்டும் ரைசா!