சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தனது கோர முகத்தை காட்டத் தொடங்கியுள்ளது. இந்தியாவில்  இதுவரை இந்த வைரஸால் 1024 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 27 பேர் உயிரிழந்துள்ளனர். 

இதையும் படிங்க: இனி 3 மணி நேரத்தில் கொரோனாவைக் கண்டறியலாம்... பிரசவத்திற்கு முன்பு சாதித்த இந்தியப் பெண்...!

கொரோனா வைரஸின் தாக்கம் மேலும் பரவாமல் இருக்க நாடு முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அமைப்பு சாரா தொழிலாளர்கள், ஆதரவின்றி தவிக்கும் முதியவர்கள், சாலையோரம் குடியிருக்கும் தினக்கூலி தொழிலாளர்கள் என லட்சக்கணக்கானோர் பட்டினி கிடக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: சிம்புவுடன் ஓவர் நெருக்கமாக இருக்கும் ஹன்சிகா... வைரலாகும் "மஹா" போட்டோவால் குஷியான ரசிகர்கள்...!

இந்நிலையில் கடந்த ஓராண்டாகவே நகரி எம்.எல்.ஏ.வான ரோஜா, அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு தரமான உணவை 4 ரூபாய்க்கு கொடுத்து வந்தார். தற்போது கொரோனா ஊரடங்கால் பலரும் உணவின்றி கஷ்டப்படுவதை அறிந்த ரோஜா, அந்த உணவு கூடத்தை மேலும் விரிவாக்கி தினமும் 5 ஆயிரம் பேருக்கு கூடுதலாக உணவு கொடுத்து வருகிறார். 

இதையும் படிங்க: எடுப்பான முன்னழகை காட்டி... இளசுகளின் ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் யாஷிகா ஆனந்த்... வைரல் போட்டோ...!

ரோஜா சாரிடபுள் டிரஸ்ட் என்ற தொண்டு நிறுவனத்தை உருவாக்கி, ஏழை எளிய மக்களுக்கு வயிராற சாப்பாடு போட்டு வருகிறார். மேலும் என்னால் முடிந்த உதவியை நான் செய்கிறேன். அதேபோல் பணம் படைத்தவர்கள் பலரும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏழை மக்களுக்கு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.