“இறுதிச்சுற்று” படத்தில் மாதவனுடன் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் நடிகை ரித்திகா சிங். நிஜத்திலும் பாக்ஸிங் வீராங்கனையான் இவர், சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கினார். அடுத்தடுத்து விஜய் சேதுபதியுடன் “ஆண்டவன் கட்டளை”, ராகவா லாரன்ஸ் உடன் “சிவலிங்கா” உள்ளிட்ட படங்களில் நடித்தார் அந்த இரண்டு படங்களுமே பெரிதாக ஹிட்டாகவில்லை. 

இதையும் படிங்க: அரைகுறை ஆடையில் நீச்சல் குளத்தில் ஆட்டம்... பிக்பாஸ் சாக்‌ஷியை மரண பங்கம் செய்யும் நெட்டிசன்கள்...!

சமீபத்தில் அசோக் செல்வன் - ரித்திகா சிங் நடிப்பில் உருவான "ஓ மை கடவுளே" திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சிறப்பான வரவேற்பை பெற்றது. ஜி. டில்லிபாபு தயாரித்துள்ள இந்த படத்தை அஷ்வத் மாரிமுத்து இயக்கியிருந்தார். எம்.எஸ்.பாஸ்கர், வாணி போஜன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்திருந்த இந்த படத்தில், ரித்திகாவின் நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. 

இதையும் படிங்க: சிம்புவுடன் ஓவர் நெருக்கமாக இருக்கும் ஹன்சிகா... வைரலாகும் "மஹா" போட்டோவால் குஷியான ரசிகர்கள்...!

தற்போது கொரோனா வைரஸால் நாடு முழுவதும் உச்சகட்ட பீதி நிலவி வருகிறது. இதையடுத்து ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பித்துள்ளது. இதனால் வீட்டிற்குள் முடங்கி கிடக்கும் நேரத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் திரைப்பிரபலங்கள் பலரும் டுவிட்டர், இன்ஸ்டாகிராம், டிக்-டாக் என சோசியல் மீடியாவில் பிசியாக வலம் வருகின்றனர். 

இதையும் படிங்க: தோழிகளுடன் கூல் போஸ் கொடுத்த விஜய் மகள்... இணையத்தில் வைரலாகும் திவ்யா சாஷா லேட்டஸ்ட் போட்டோ...!

அப்படி ரித்திகா சிங் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகிறது. குட்டை டவுசர், டீசர்ட், வித்தியாசமான ஹேர் ஸ்டைலுடன் குலுங்க, குலுங்க ஆட்டம் போட்டுள்ளார். ரித்திகாவின் இந்த ஆட்டத்தை பார்த்த நெட்டிசன்கள் என்ன கொரோனா முத்திடுச்சா என்று கலாய்த்து வருகின்றனர்.