பாரதிராஜா அறிமுகப்படுத்திய நடிகர்கள், நடிகைகள் யாரும் மோசம் போனதில்லை. அப்படி பாரதிராஜாவால் “கடலோர கவிதைகள்“ படத்தில் அறிமுகமானவர் ரேகா. அந்த படத்தில் அவர் நடித்த டீச்சர் கதாபாத்திரம் இளசுகளை கவர்ந்ததால் 80ஸ் கிட்ஸ்களின் கனவு நாயகியாக வலம் வந்தார். முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட்டடித்ததால் தென்னிந்திய மொழிகளில் ஒரு ரவுண்ட் வந்தார். 

இதையும் படிங்க: என்னாது நிர்வாண யோகாவா?.... ஊரடங்கில் எல்லை மீறி ஆட்டம் போடும் இளம் நடிகை...!

அதன் பின்னர் ரேகா நடித்த “புன்னகை மன்னன்”, “எங்க ஊரு பாட்டுக்காரன்”,“நம்ம ஊரு நல்ல ஊரு”, “என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு”, “புரியாத புதிர்” என பல படங்கள் ஹிட்டடித்தது. சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் போதே 1996ம் ஆண்டு கேரளாவைச் சேர்ந்த ஜார்ஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். அடுத்த இரண்டு ஆண்டுகளிலேயே இந்த தம்பதிக்கு அனுஷா என்ற அழகிய பெண் குழந்தை பிறந்தது. 

இதையும் படிங்க: பிகினியில் செம்ம கெத்தாக போஸ் கொடுத்த ஆர்யா மனைவி.... வைரலாகும் சாயிஷாவின் ஹாட் கிளிக்...!

தற்போது சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வரும் அனுஷாவின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பார்ப்பதற்கு அம்மாவை விட செம்ம அழகாக இருக்கும் அனுஷாவின் புகைப்படத்தை பார்த்தால் உங்களுக்கு வச்ச கண்ணை எடுக்க தோணாது. டாப் ஹீரோயின்களுக்கே டப் கொடுக்கும் அளவிற்கு க்யூட்டாக இருக்கும் ரேகா மகளை சினிமாவில் சீக்கிரம் பார்க்க வேண்டும் என ரசிகர்கள் ஆசைப்படுகின்றனர். அப்படி மட்டும் அனுஷா சினிமாவில் நடிக்க தொடங்கினால் அம்மாவை விட பெரிய நடிகையாக வலம் வருவார் என்பதில் சந்தேகம் இல்லை.