இந்நிலையில் இவர், முதல் முறையாக மிகவும் கலர் ஃபுல் ஆல்பம் பாடலுக்கு, வேட்டியை மடித்து கட்டி... மணப்பெண் போல் அலங்காரம் செய்து கொண்டு நடனம் ஆடி அசத்தியுள்ளார். 

கடந்த 2016ஆம் ஆண்டு, வெளியான 'கிரீக் பார்ட்டி' என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ராஷ்மிகா. இதைத்தொடர்ந்து, அஞ்சனி புத்ரா, சமாக் போன்ற படங்களில் நடித்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பின்னர் தெலுங்கு பட வாய்ப்புகள் வர, நடிகர் நாக சௌரியாவிற்கு ஜோடியாக 'சலோ' படத்தின் நடித்தார். இந்த படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை என்றாலும், இந்த படத்தை அடுத்து நடிகர் விஜய் தேவர்கொண்டா ஜோடியாக ராஷ்மிகா நடித்த 'கீதா கோவிந்தம்' மிகப்பெரிய வெற்றி பெற்றது.மேலும் இவருக்கு, சிறந்த நடிகைக்கான விருதுகளையும் பெற்று தந்தது. 

தற்போது தெலுங்கு, கன்னடம், மொழி படங்களை தொடர்ந்து ரஷ்மிக்கா தற்போது நடிகர் கார்த்திக்கு ஜோடியாக 'சுல்தான்' படத்திலும் நடித்து வருகிறார். அதே போல் தளபதி 65 ஆவது படத்திலும் இவர் ஹீரோயினாக நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. திரையுலகில் அறிமுகமான நான்கு வருடங்களிலேயே மற்ற நடிகைகளை பொறாமைப்பட வைக்கும் அளவிற்கு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விட்ட ராஷ்மிக்கா, தற்போது பாலிவுட் திரையுலகிற்கு செல்லவும் தயாராகி விட்டார்.

ஹிந்தியில் 'மிஷன் மஞ்சு' என்ற படத்தில் ராஷ்மிகா தற்போது ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்த படத்தின் மூலம் பாலிவுட்டில் கால்பதிக்கிறார் ராஷ்மிகா. இந்நிலையில் இவர், முதல் முறையாக மிகவும் கலர் ஃபுல் ஆல்பம் பாடலுக்கு, வேட்டியை மடித்து கட்டி... மணப்பெண் போல் அலங்காரம் செய்து கொண்டு நடனம் ஆடி அசத்தியுள்ளார்.

'டாப் டக்கர்' என்று பெயரிடப்பட்டுள்ளது இந்த ஆல்பம், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ளது. பாட்ஷா என்பவர் எழுதியுள்ள இந்த பாடலை யுவன், உச்சனா அமித் ஜோனிதா காந்தி ஆகியோர் சேர்ந்து பாடியுள்ளனர். இந்த பாடலின் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. மேலும் இருந்து குறித்து ராஷ்மிகா தன்னுடைய அனுபவம் குறித்து கூறுகையில்... இந்த ஆல்பம் பாடலில் நடித்தது வித்தியாசமான அனுபவமாக இருந்ததாகவும், கண்டிப்பாக அனைத்து தரப்பை சேர்ந்தவர்களுக்கும் பிடிக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.