பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராதிகா ஆப்தே. தமிழில் டோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா  ஆகிய படங்களில் நடித்திருந்த போதும், பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நடித்த கபாலி படம் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனம் ஈர்த்தார். இவர் இந்தியில் துணிச்சலாக படுகவர்ச்சி கேரக்டர்களில் நடித்து வருகிறார். பாலிவுட்டில் பல ஹீரோயின்கள் நடிக்க தயங்கும் கதாபாத்திரங்களை எல்லாம் தனது நடிப்பால் ஊதி தள்ளுகிறார். என்ன தான் இந்தியில் வெற்றிக்கொடி கட்டினாலும் ராதிகா ஆப்தே நம்ம தமிழ்நாட்டு பொண்ணு, வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க: மீண்டும் வெளியானது ஆன்ட்ரியா லிப் லாக் காட்சி.... தீயாய் பரவும் வீடியோ...!

வெப் சீரியஸ் ஒன்றில் படுக்கையறை காட்சிகளில் நடித்த ராதிகா ஆப்தேவிற்கு பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. பாலிவுட்டில் கவர்ச்சி காட்டுவது எல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லை என்றாலும் ராதிகா ஆப்தே நிர்வாண காட்சிகளில் எல்லாம் நடித்து தெறிக்கவிடுகிறார். சோசியல் மீடியாவிலும் ஆக்டிவாக வலம் வரும் ராதிகா ஆப்தே, இன்ஸ்டாகிராமில் பதிவிடும் புகைப்படங்கள் அனைத்தும் கொஞ்சம் ஓவர் ரகம் தான். ஹாட் பிகினி, உள்ளாடை அணியாமல் கவர்ச்சி ஆடையில் கிளாமர் போஸ் என்று சகட்டு மேனிக்கு அடித்துவிடுகிறார். 

இதையும் படிங்க: டிரஸ் போட்டிருக்கீங்களா?... பிரபல தொகுப்பாளினி டிடி-யின் போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்...!

கொரோனா தொற்று காரணமாக இந்தியா உள்ளிட்ட பல வெளிநாடுகளிலும் ஊரடங்கு பின்பற்றப்பட்டு வருவதால், சாதாரண மக்கள் முதல்  திரைபிரபலங்கள் வரை அனைவரும் , எங்கும் செல்லாமல் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலை உருவாகியுள்ளது.இப்படி ஒரு சூழ்நிலை உள்ளது இளசுகளுக்கு போர் அடித்தாலும், சிலர் தங்களுக்கு இது பிடித்துள்ளது என்பதை வெளிப்படையாகவே தெரிவித்துள்ளனர். அந்த வகையில், சமீபத்தில் ராதிகா ஆப்தேவும் தனக்கு இந்த லாக்டவுன் பிடித்திருப்பதாக கூறியிருந்தார். மேலும் லாக்டவுன் நேரத்தில் தனது ரசிகர்களை குஷியாக்குவதற்காக ரக, ரகமாக போட்டோக்களை பகிர்ந்து வருகிறார். 

இதையும் படிங்க: கர்ப்பமாக இருப்பது உண்மை தான்... அம்மாவானதை உறுதி செய்தார் மைனா நந்தினி...!

அப்படி அய்யோ பரிதாபம் என்ற ரேஞ்சுக்கு ராதிகா ஆப்தே பகிர்ந்துள்ள புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. லண்டனில் ஆங்கில பத்திரிகை ஒன்றிற்கான போட்டோ ஷூட்டில் ராதிகா ஆப்தே பங்கேற்றுள்ளார். அப்போது பிரேக்கின் போது கொளுத்தும் வெயிலில் சாலையில் அமர்ந்திருப்பது போன்ற போட்டோவை பகிர்ந்துள்ளார். இங்க கேரவேன் கேட்டு டார்ச் செய்யும் நடிகைகள் மத்தியில் நடுரோட்டில் கொளுத்தும் வெளியிலில் அமர்ந்திருக்கும் ராதிகா ஆப்தேவை பார்த்தால் கொஞ்சம் பாவமாக தான் இருக்கிறது. இதோ...